அகிலத்திரட்டு அம்மானை 1441 - 1470 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1441 - 1470 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

பிச்சைக் கெனவே புறப்பட்டான் காடதிலே
அச்சமில்லா லட்சுமணர் ஆனஸ்ரீ ராமருமாய்
மானின் பிறகே மனம்வைத்து நின்றிடவே
வானின் செயலால் வானவர்கள் பார்த்திருக்க
லட்சுமியிடத்தில் நாடியே பிச்சையென்றான்
அச்சமில்லா லட்சுமியும் ஆதிமுறைப்படியே
மிக்கான சீதையென மேதையை ஆக்கிவைத்து
அக்கினியானதிலே அமர்ந்திருக்கும் வேளையிலே
அன்றுவரம் வேண்டி ஆதிமேதை ஆனவளும்
நின்று அரக்கனுக்கு நேராகப் பிச்சையிட்டாள்
நாரா யணர்தேவி நல்லதிரு லெட்சுமியை
ஏராத பாவி இலச்சைகெட்டத் தீயரக்கன்
தேரிலே அம்மைதனைத் திருடிக்கொண் டேகினனாம்
பாரிலே வுள்ள பட்சி பறவைகளும்
கண்டு பதறிக் கதறிமிக அழவே
அண்டர் முனிதேவர் எல்லோருந் தாமழவே
மான்வேட்டையாடி மாரீசனை யறுத்துத்
தான்வேட் டையாடும் தகையாலே தம்பியுடன்
வந்தார்காண் லட்சுமியும் வாழ்ந்திருக்கு மண்டபத்தில்
பந்தார் குழலனைய பாவையரைக் காணாமல்
கலங்கி மிகவாடி கண்ணீர் மிகச்சொரிய
மலங்கியே லட்சுமணர் மண்ணிற் புரண்டழுதார்
என்னே மணியே எனைப்பெற்ற மாதாவே
பொன்னே யமுதே பெற்றவளே யென்றழுதார்
இராமர் முகம்வாடி நாயகியைத் தான்தேடி
ஸ்ரீரா மர்கலங்கி சினேக முடனழுதார்
மனுவாய்ப் பிறக்க மனுவுடம்பு கொண்டதினால்
தனுவா னதையடக்கித் தானே புலம்பலுற்றார்
இளையபெருமாளும் லெட்சுமியைக் காணாமல்
மழையைமிகக் காணாத வனப்பயிர்கள் போலேவாடி

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi