அகிலத்திரட்டு அம்மானை 1351 - 1380 of 16200 அடிகள்
லட்சும ணரெனவே ஏற்றசத்து ருபரதன்
கட்சியுடன் மாயன் கணையோ டுடன்பிறந்தார்
இப்படியே ராவணற்கு எல்லோ ரும்பகையாய்
முப்படியே உள்ள முறைநூற் படியாலே
வந்து பிறந்தார்காண் மாயவரு மம்மானை
சிந்தாக்குலந் தீர்க்க சிணமே பிறந்தனராம்
இப்படியே ராமர் ஏற்ற தசரதற்கு
அப்படியே பிறந்து அங்கிருந்தா ரம்மானை
சீதா கல்யாணம்
சீதை வளர திருவில்லுந் தான்வளர
கோதைக் குழல்சீதைக் கோமான் மிகவளர
சிராமர் பிறப்போர் சிறப்பாய் வளர்ந்திடவே
இராமர் குலங்கள் இரகசிய மாய்வளர
அரக்கன் கொடுமை அண்டமள வேவளர
சீதை வளர்ந்து சிறந்த வயதானதிலே
மாதை மணமிடவே மாதா மனதிலுற்றுத்
தன்புரு சனோடே தையல்நின் றேதுசொல்வாள்
அம்பும்வில் லும்வளர ஆயிழையுந் தான்வளர்ந்து
பக்குவங்க ளாச்சே பைங்கிளிக்கு மாலையிட
ஒக்குவ தென்ன உரைப்பீரென் னுத்தமரே
என்று மடமாது ஏற்ற தினகரரை
நின்று வணங்கி நேரிழையுஞ் சொல்கையிலே
வில்லை வளைத்தல்லவோ மெல்லிமணஞ் சூடுவது
வல்ல கலைக்கோட்டு மாமுனியைத் தான்வருத்தி
இன்னபடி யீதென்று எடுத்துரைக்க மாமுனியும்
அன்னப் பொழுதில் அருளுவான் மாமுனியும்
பூரா சமான புவியைம்பத் தாறிலுள்ள
இராசாதி ராசரெல்லாம் இப்போ வரவழைத்து
வில்லை வளைத்தவர்க்கு மெல்லிமணஞ் சூட்டுமென்று
சொல்லியே மாமுனியும் தசரதனார் கண்மணியைக்
கண்டுநின்று மாமுனியும் கண்ணனார்க் கேதுரைப்பான்
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 1351 - 1380 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi