அகிலத்திரட்டு அம்மானை 1291 - 1320 of 16200 அடிகள்
என்ன விதமாய் இதுபிறவி செய்வோமென்று
பொன்னம் பலத்தோர் புத்திநொந்து தாமிருந்தார்
ஈசுரரு மப்போ இரத்தின கிரிதனிலே
வீசு பரனும் வேள்வி யதுவளர்க்க
வேள்வி வளர்த்து விமல னுருவேற்றத்
தாழ்வில்லா ஆயன் தற்சொரூபந் தானாகித்
ஆவித்திருமால் அப்போது உபாயமதாய்
சோதித்திருமால் சூரன்தனைசெயிக்க
திருக்கணைக் காலில் செய்ய நரம்புருவி
கருக்கணமாய் ராம பாணக் கணையெனவே
உறுதிகொண்டு வேள்விதனில் விட்டெறிந்தா ரம்மானை
பிறிதிகொண்டு லட்சுமியும் பிலத்த திருக்கரத்தில்
தூண்டு விரலில் துய்ய நரம்புருவி
வேண்டும் பெரிய வீரவில் லீதெனவே
ஆராரு மிந்தவில்லை அம்பேற்றக் கூடாமல்
சீரா மரேற்ற சிந்தித்தா ளம்மானை
உடனேயது வில்லாய் ஓம மதில்பிறக்கத்
திடமாக ராமர் திருக்கணைக்கா லுள்நரம்பு
பாணமதாய் வேள்விதனில் பரிவாயப் பிறந்திடவே
தாணரும் வானோரும் சங்கத்தோ ருங்காண
எல்லோருங் கண்டு இதுகண் மாயமெனவே
வல்லோர்க ளான வாய்த்ததே வாதியெல்லாம்
சங்கடங்கள் தீர்ந்ததென்று சந்தோசங் கொண்டாட
அங்கணங்க ளான அலகைமிகக் கூத்தாட
இராமபா ணத்தாலே இராவண சூரனையும்
ஸ்ரீராமர் சென்று தென்னிலங்கை தன்னிலுள்ள
அரக்கர்குல மறுப்பார் அச்சுதனா ரென்றுசொல்லி
இரக்கமுள்ள தேவரெல்லாம் இரங்கிமிகக் கொண்டாட
வில்லோ டுடன்பிறந்த வீரலட்சு மியெனவே
வல்லோர்க ளாராலும் வந்திந்த வில்லதையும்
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 1291 - 1320 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi