அகிலத்திரட்டு அம்மானை 1231 - 1260 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1231 - 1260 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

மாய னிதுகேட்க மறையோ னகமகிழ்ந்து
தூயவரு மங்கே சொல்லுகிறா ரம்மானை
பரலோ கமென்ற பைம்பொன் கயிலையதில்
சாலோ கந்தன்னில் தானிருந்த மாமுனிவர்
துசுவீசு மாமுனியும் சுகசீல மாமுனியும்
விசுவாச மாயிருந்து விசாரம திட்டனராம்
வாருந் துசுவீசு மாமுனியே நீர்கேளும்
நீரும் நாமுங்கூடி நீணிலத்தில் போயிருந்து
நானுமொரு பெண்மதலை நல்ல மகவாகத்
தானுமோ ராண்மதலை தலைவன் தனைவாங்கிச்
சம்மந் தமாகித் தானிருந்து நாடாண்டு
உம்மந் தமான உதவிபெற வேணுமென்று
இருபேரு மிருந்து எனைநினைந்து மாமுனிவர்
உருவேற்றி வேள்வி ஓம மதுவளர்க்க
இந்தப் படியே இவர்களிரு மாமுனியும்
எந்தன் தனைநோக்கி இருந்தார் தவசுகண்டீர்

குறு முனி சாபம்

அல்லாமற் பின்னும் அரக்கன்ரா வணன்தனக்குக்
கொல்லாமற் கொல்லவொரு குறுமுனிவன் சாபமுண்டு
அரக்கன் வரம்வேண்டி அவன்போகு மவ்வளவில்
இரக்கமாய் மாமுனியும் இருந்தான் தவசதிலே
தவசுநிலை பாராமல் தலைபத் தரக்கனுந்தான்
பவிசு மதமாய்ப் படுவ தறியாமல்
முனியையவன் காலால் ஒத்தினான் மாபாவி
அநியாயப் பாவி அரக்க னவன்றனக்குக்
கூறினான் மாமுனியும் கொள்ளைகொண்டச் சாபமது
தூறின சாபத் துல்லியத்தை நீர்கேளும்
மாலை மிகப்போற்றி வாய்த்ததவம் நிற்கையிலே
காலெடுத்து ஒத்தினையே கள்ளாவுன் றனக்கு
இந்தத் தவசுதனில் ஈசுரரைத் தானினைந்து
உந்தன் தனையறுக்க ஒருராம பாணமது

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi