அகிலத்திரட்டு அம்மானை 1111 - 1140 of 16200 அடிகள்
அப்படியே அரக்கன் ஆண்டிருக்கும் மன்னாளில்
முப்படியே விட்டகுறை முடிவாகும் நாளையிலே
தேவாதிதேவர் தினம் ஏவல் செய்திடவே
மூவாதிமூவர் ஊழியங்கள் செய்திடவே
முறுக்கமதால் பாவி ஊழியங்கள் கொண்டதினால்
பொறுக்க முடியாமல் பூலோகத்தார் களெல்லாம்
தெய்வ ஸ்த்திரீயும் தேவாதி தேவர்களும்
அய்யா திருமாலுக் கபையம் அபயமென
அபயமிடும் மொலியை அச்சுதருந் தானமர்த்தி
கபயமிடு வேதன் கயிலையது தானேகி
ஆதிபரமன் அடியை மிகப் போற்றி
சோதித் திருமால் சொல்லுவா ரம்மானை
பத்துத் தலையுடைய பாவி யரக்கனுக்கு
மற்றும்பல கோடி வரங்கள் மிகயீந்த்தினால்
தேவரையும் மூவரையும் தேவேந் திரன்வரையும்
நால்வரையும் வேலைகொண்டு நாடாண்டா னம்மானை
வாசு அரக்கன் மணிமேடை தூராட்டால்
வீசுவேன் வாளாலே வெட்டுவேன் பாருவென்பான்
வருண னவன்மேடை வந்துத்தொளி யாதிருந்தால்
மரணம்வரும் வரையும் வலுவிலங்கில் வைப்பேனென்பான்
சந்திரருஞ் சூரியரும் சாய்ந்துமிகப் போகாட்டால்
சந்து சந்தாகச் சரத்தாலறுப் பேனென்பான்
தெய்வ மடவார்கள் திருக்கவரி வீசாட்டால்
கைவரைந்து கட்டிக் கடுவிலங்கில் வைப்பேனென்பான்
நாலு மறையும் நல்லாறு சாஸ்திரமும்
பாலு குடஞ்சுமந்து பணிந்துமுன்னே நில்லாட்டால்
அஸ்திரத்தால் வாந்து அம்மிதனில் வைத்தரைத்து
நெற்றிதனில் பொட்டிடுவேன் நிச்சயமென் பானரக்கன்
வானவர்க ளெல்லாம் மலரெடுத்து என்காலில்
தானமது பண்ணித் தாழ்ந்துநில்லா தேயிருந்தால்
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 1111 - 1140 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi