அகிலத்திரட்டு அம்மானை 4141 - 4170 of 16200 அடிகள்
போகமதில் மேலோகப் பிறப்பெல்லாந் தோணவைத்துக்
கன்னி வயிற்றிலுறக் காட்டில் மிகப்பிறந்து
தன்னிக ரில்லாத சான்ரோ ரெனவளர்ந்தார்
வளர்ந்தவர்கள் ராச்சியத்தை வகையாக ஆண்டிருக்க
இழந்த கலிதோன்றி இவன்சென்றா னவ்வுகத்தில்
கலிய னவன்செல்லக் கைமறந் தவ்வுலகில்
பொலிவுள்ள தர்மம் பொன்றிச்சே நீதமதும்
முன்னிருந்த சாஸ்திரமும் முறையும் மிகத்தவறி
பின்னுதித்த நீசன் பிரித்தான்காண் வெவ்வேறாய்
ஆனதால் பூலோகம் அழிந்து மிகத்தவறி
ஊன மடைந்தார் உலகிலுள்ள சான்றோர்கள்
தந்திர மந்திரத்தால் சான்றோரைத் தான்மயக்கிப்
பந்தி யழித்ததினால் பத்தினியாள் பெற்றமக்கள்
நாணமிகவடைந்து நாட்டில் பிரிவாகி
ஈனதுன்பமாகி இருக்குமந்த நாளையிலே
ஒண்ணுக்கொண் ணெதிர்த்து ஒத்துமிக வாழாமல்
பெண்ணுக்கு ஆணும் பிரிவு முறிவாகித்
தாய்க்குத்தான் பிள்ளை தாழாம லேபேசும்
வாய்க்குவாய்ச் சொன்னாலும் மங்கைநல்லா ளென்றிடுவான்
பிதாவை மிகநம்பார் புண்ணியமென் றேபாரார்
இதாகவெல்லாம் நீசன் இடறுவரச் செய்ததினால்
ஆனதா லிந்த வழிவழியே யங்குளது
போனதால் நீசம் பொன்னுலோ கம்வரையும்
ஏகிச்சு தையா இடறுநீ சக்கலியும்
கோவிச்சு தையா கொடுங்கலியு மங்கேகி
ஈதல்லால் பின்னும் இன்னுஞ் சிலநாளில்
ஏதெல்லா மாகுதென்று ஈசுரரே பார்த்திருவும்
மாயனை யும்வருத்தி வார்த்தைகே ளாதிருந்தால்
தேய மிருள்மூடிச் சென்றிடுங்கா ணீசுரரே
அப்போது ஈசுரரும் அதற்கேது செய்வோமென்று
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 4141 - 4170 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi