அகிலத்திரட்டு அம்மானை 1801 - 1830 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1801 - 1830 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

குதலை மொழியாரே கொம்பே றிடையாரே
விலங்குச் சிறையும் மிகுசிறையு முங்களுக்கு
மலங்குவது மெத்த மாய்ச்சலுண் டாகியபின்
ஸ்ரீகிருஷ்ண னாகத் திருமா லுதித்தபின்பு
குறுக்கிட்ட தோசம் கொடுமை மிகத்தீர்ந்து
பின்னே பதவிப் பேறுண்டு முங்களுக்கு
மின்னே ரொளியை விமலன் பிறவிசெய்தார்
பிறவியரன் செய்யப் பிறந்தார்கள் பூமியிலே
திறவியது விட்டுத் தேவகியும் ரோகணியும்
மதுரைதனில் வந்து மாபாவிக் கஞ்சனுக்கு
இருதையல் மாமயிலார் ஏற்ற பிறப்பெனவே
கூடப் பிறந்தால் கொடியதோ சமெனவே
தேட வொருராசன் சிறுவி யெனப்பிறந்தார்
பிறந்தே தான்கஞ்சனுக்குப் பிறப்பெனவே பேசும்வளம்
சிறந்தே யிவர்கள் திருத்தமாய் வாழுகையில்
இப்படியே கஞ்சன் இவர்களிரு தங்கையையும்
அப்படியே கூட்டி அவன்வேட்டை யாடிவர
அம்மரமானதுதான் ஆறாண்டு கழித்தபின்பு
செம்மையுள்ள ஓர்பழம்தான் சிவனருளால்பழுக்கும்
அதைஎடுத்து புசிப்பார் அரனார் சாபப்படியே
இதைப் பறிக்கவென்று இயல்பாய் வருகையிலே
மாமுனிவன் தனக்கு வாய்த்திருந்த மாம்பழத்தைத்
தாமுனிந்து கஞ்சன் தானக்கனி பறித்துத்
தங்கையர்க்குத் தானீந்தான் சயோகமுனி யறிந்து
மங்கையர்க்கு வந்த மகனா லழிவையென்று
மாயனுட ஏவலினால் மாமுனியு மப்போது
பாயமுள்ள கஞ்சனுக்குப் படுசாப மிட்டனனே
சாபமது கஞ்சன் தானறியா வண்ணமுந்தான்
பாவமேநாடோறும் பண்ணிவரும் நாளையலே
வேதியனைத் தான்வருத்தி மிகுத்த கேடுள்ளகஞ்சன்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi