அகிலத்திரட்டு அம்மானை 9361 - 9390 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 9361 - 9390 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மிராசு மூவர்க்கு முதன்மைதானோ மூலச் சிவமணி குருநாதனோ
சான்றோர் கைகட்டிச் சரணங்கூறத் தரணி யொருகுடைக் காள்வானோ
ஆண்ட மணிநாதன் நாரணர்க்கு ஆன மதலையாய் வந்தவரோ
வைய மளந்ததோர் நாரணர்க்கு மதலை யெனவந்த வைகுண்டரோ
தர்மப் பதியாளும் வைகுண்டரோ சாணர்க் கனுகூல மானவரோ
அலைந்து மலைந்ததோர் சான்றோர்க்கு அதிக விதிகொண்டுப் பிறந்தவரோ
சாணாக் குடிகுல நாயகமோ தர்மந் தழைக்கவே பிறந்தவரோ
தோணாத் துறைகொண்டு வந்தவரோ துவரா பதியாளப் பிறந்தவரோ
ஏழு யுகபரக் கணக்கையெல்லாம் எடுத்து நடுத்தீர்க்கப் பிறந்தவரோ
ஆளும் வைகுண்டப் பதியாளவே அரிய வைகுண்டம் பிறந்தவரோ
வீர வீராதி வீரன்தானோ வீர சூரனா ரீன்றகண்ணோ
சூர சூராதி சூரன்தானோ சூர சூரனார் பெற்றகண்ணோ
நாத நாரணர் பெற்றகண்ணோ நாக மணிநாதன் பெற்றகண்ணோ
சீதக் குணநாதன் பெற்றகண்ணோ சீதை மணவாளன் பெற்றகண்ணோ
மேக நிறத்தண்ண லீன்றகண்ணோ மேலோர் போற்றும்வை குண்டக்கண்ணோ
ஏகச் சிவநாதன் பெற்றகண்ணோ இறவா திருமூர்த்தி பெற்றகண்ணோ

வேறு

சந்திர சுந்தர தந்திர மந்திர சாமிசீர் பாலகனோ
தாயக மாயக நாயக மாகிய தாண்டவ சங்கரனோ
சந்திர சந்திர யந்திர குஞ்சித சூரியப்பிர பாலகனோ
சூரனோ வீரனோ மாதனோ நீதனின் சூலகலா திபனோ
தந்திர மந்திர இந்திர சுந்தரின் சந்ததி சந்ததியோ
சகடவெலி சண்டரை அகடவெலி செய்திடும் சுக்கிர விக்கிரனோ
கொந்தரி சந்ததின் தந்திர சுந்தர கோசல நாயகனோ
கொடுகலி யறவொரு கடுமுனை கொண்டருள் குலவெங்கிட குண்டமோ
சூரனோ வீரனோ தீரனோ நீதனோ சூரியப்பிரகாசவீதனோ
சுத்தனோ கர்த்தனோ நித்தனோ அத்தனோ துலங்கும் தங்கரனோ
சூரனோ வீரனோ தீரனோ நாதனோ சூரியப்பிரகாச வீதனோ
வீரனோ காரனோ தாரனோ சாரனோ வெங்கிட ரங்கிடனோ
விகடக டகடக டகுட டடமருள் வேதவிக்கிர சுக்கிரனோ
தீரனோ காரனோ சீரனோ வீரனோ செந்திலம்பதிவளர் சந்திரனோ

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi