அகிலத்திரட்டு அம்மானை 14221 - 14250 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 14221 - 14250 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

பகவதிக்கு சச்சிதானந்த வடிவைக்கான அருளல்

விருத்தம்

வந்தனள் பதியின் சீரும் வளர்மணி மேடைக் காலும்
சந்தன வாடை வீசும் தலமது நருட்கள் சீரும்
செந்தமிழ் தர்மச் சீரும் சிவாலயத் தெருக்கள் நேரும்
புந்தியில் மகிழ்ச்சை கூர்ந்து போத்தியை மெச்சு வாளே

விருத்தம்

போற்றிநீ ருரைத்த தெல்லாம் பொய்யில்லை மெய்ய தாகும்
சாற்றினீர் பின்னுந் தெய்வத் தார்குழ  லுண்டு மென்று
பார்த்துநீர் நமக்குக் காட்டும் பைங்கிளி மாரை யெல்லாம்
சீத்துவ மாக எந்தன் சிந்தையி லறிய என்றாள்

விருத்தம்

உடனந்தக் கிழவன் தானும் உள்ளது தானே யென்று
மடமயில் குமரி தன்னை வாவென அழைத்துக் கூட்டி
குடதன முடையா ரானக் கோதையர் கோவில் புக்கி
நடைதனில் நின்று கொண்டு நாரிய ரிவர்தா மென்றார்

விருத்தம்

பார்த்தந்த மடவா ளானப் பகவதி மாது சொல்வாள்
சேர்த்திந்த மடவார் தம்மைத் திருமணஞ் செய்த மன்னர்
ஏற்றெந்த இடத்தே வாழ்வார் இதுநமக் கறியக் காட்டிக்
சாற்றிந்தத் தலமுங் காட்டித் தன்பதி போவோ மென்றாள்

பகவதிக்கு சச்சிதானந்த வடிவைக்கான அருளல்
நடை

ஆதிக் கிழவா அரிவைகன்னி மார்களையும்
நீதி யுடன்கண்டேன் நேரிழைமார் தம்மைமணம்
செய்த கணவரையும் சென்றுபார்த்த தேநாமும்
நெய்தரிய நம்பதியில் நாம்போவோம் வாருமையா
என்றுரைக்க மாது இளங்கிழவ னேதுரைப்பார்
நன்றுநன்று பேத்தி நாயகிமார் மன்னனையும்
இன்றுநீ காண இப்போது காட்டுகிறேன்
பார்த்துக்கோ வென்று பையவா வென்றுசொல்லிக்
கோற்றுக் குருவம்பலத்தில் கும்மிமிகக் கொண்டாடி
நாட்டுத்தீர்வைக் கணக்கு நவின்றிருக்கும் வேளையிலே
காட்டிக் கொடுத்தார் கரியமால் நாரணரை
பகவதியாள் வந்து பார்க்கின்ற அப்பொழுது
சுகபதியாள் கண்ணதுக்குத் துய்யத் திருமாலும்
பச்சை நிறமும் பவளவாய்க் கனியிதழும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi