அகிலத்திரட்டு அம்மானை 15541 - 15570 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 15541 - 15570 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பாதங்கீழ்க் கொள்ளாமல் பாலதியச் சான்றோர்கள்
ஈத லிரக்கமுடன் எடுத்தென்னைத் தோளில்வைத்துப்
போற்றி மகிழ்ந்து பூமெத்தை மேலிருத்தி
ஏற்றிப் பலகாலும் என்சொல் மிகக்கேட்டுத்
தாங்கி யிருந்த சான்றோர்க ளின்பெருமை
நாங்க ளுரைக்க நாடுமிகத் தாங்காதே
என்னென்ன பவிசு எமக்கவர்கள் தாமீந்து
பொன்னம் பலமீதில் புகழ்ந்துமிக வாழ்வாரே
பாவிநீ யென்னைப் பரிசுகெடத் தானடித்து
ஏவிநீ விட்ட ஏவலா ளிப்போதெங்கே
ஆணுவங்க ளெங்கேஉன் ஆனைப் படைகளெங்கே
பூணுகின்ற தங்கப் பொன்னா பரணமெங்கே
விஸ்தார மெங்கேநீ வீற்றிருக்கு மேடையெங்கே
சுற்றார் கிளைகளெங்கே தோகைமயி லார்களெங்கே
குதிரைத் தளங்களெங்கே கோட்டையெங்கே வாசலெங்கே
சதுரா யணிவகுத்தத் தாண்டும் படைகளெங்கே
தேரெங்கே யுன்றன் சிங்கா சனங்களெங்கே
ஊரெங்கே யுன்றன் ஒழுங்குதளச் சேனையெங்கே
மாடமெங்கே கூடமெங்கே மணிமேடை யாரமெங்கே
தோடமெங்கே யுன்றன் தோழரெங்கே சூரமெங்கே
ஆயுதங்க ளெங்கேவுன் அம்புதடிக் காரரெங்கே
வாயுரங்க ளெங்கேவுன் வாயில்காப் போர்களெங்கே
துட்டமெங்கே யட்டியெங்கே துரைத்தனங்க ளானதெங்கே
பட்டமகங் காரமெங்கே பருங்கிள்ளாக் கானதெங்கே
மாடெங்கே நீதான் வளர்த்த மிகமெங்கே
ஆடெங்கேயுந்தனுட ஆரம்பை மாதரெங்கே
வேடிக்கை யெங்கேநீ விதித்த கணக்குமெங்கே
ஓடி யுலாவும் உற்றசா ரட்டுமெங்கே
வண்டியெங்கே யுன்றன் வாழ்வெங்கே மாட்சியெங்கே
சண்டிப் பயலேவுன் தாடாண்மை யெங்கேசொல்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi