அகிலத்திரட்டு அம்மானை 15811 - 15840 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 15811 - 15840 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சொன்னே னானுன்னைச் சொன்ன மொழிப்படியே
உன்னால் குதித்து உற்ற கலியனென
இந்நாள் வரைக்கும் இருந்தாயே பார்மீதில்
பார்மீதில் நானும் பரதேசிப் போலிருந்து
போரேது மில்லாமல் பொறுதி யுடனிருக்கக்
கர்ம வயசுனக்குக் காலஞ் சரியாகி
வர்மம்வந்து மூடி மாண்டாயே தன்னாலே
முன்னுனக்குத் தந்த முடியு மென்சக்கரமும்
மன்னுகந்த நல்ல வரங்கள்மிகத் தத்துவமும்
எல்லாம் நீயிப்போ என்முன் னெடுத்துவைத்துப்
பொல்லாத வனேநகரம் புக்கிடுநீ யென்றனராம்
மாறி யுரைக்க வாய்மொழிக ளில்லாமல்
ஊறிக் கலியன் உடக்கடித்து வைத்தனனே
எல்லா வரமும்வைத்து என்றன் முடியும்வைத்து
பொல்லாப்பு மானதொருப் பொய்கள வுமுருட்டும்
தந்திர மாஞாலத் தத்துவங்க ளானதுவும்
அந்திர மதான அன்னீத வஞ்சனையும்
மாய்கை பலதும் வளக்கோர வாரமதும்
பொய்களோடு சூது சர்வபொல்லாப் பானதெல்லாம்
என்னோடு கூட யானு மதுகூட
வன்னகரம் புக்கிடுவோம் என்றுவரம் வைத்தனனே
வைக்க அவனுடைய மாய்மால மாய்கையதும்
பொய்க்கலிய னுயிரைப் பொதிந்துத் திரையாக
ஆயிரத்திரு நூறு அணியாய்ப் பவஞ்சூடித்
தீயிரத்த மான தீரா தருநரகில்
சுற்றி யெடுத்துத் தூக்கிக்கொண் டேயவளை
இத்தனைநா ளும்நம்மை இரட்சித்த இராசனென்று
மாய்க்கையெல் லாங்கூடி வளைந்தவ னைத்தூக்கிப்
பேயலகை வாழும் புழுக்குழிக் குள்ளாக்கி
மேல்நோக்கி நிமிர வடாமல் மாய்கைஎல்லாம்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi