அகிலத்திரட்டு அம்மானை 13111 - 13140 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 13111 - 13140 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

குழைந்த வார்த்தை மிகக்கூறி குழந்தை யேழு மினவழியும்
நுழைந்தே யெடுத்து நொடிப்பொழுதில் நேரேகொண்டு தாறோ மென்றார்

தரு (பல்லவி)

பிள்ளையை நாம்தா றோம் - நீங்கள்பெற்ற
பிள்ளையை நாம்தா றோம்

அனுபல்லவி

பிள்ளையை நாம்தாறோம் கிள்ளை மடவாரே
கள்ள மொழியில்லை உள்ளதைச் சொல்லுகிறோம் (பிள்ளை)

சரணம்


காட்டு வனத்திலே கண்டுங்கள் தம்மையும்
லோட்டுகள் பார்த்துநீ ருடுகலை தோற்றதும்
மேட்டுக ளாயென்னை யெரிக்கத் துணிந்ததும்
பூட்டுகள் சொல்லாமல் பெண்ணேநீர் பெற்றிடும் (பிள்ளை)

அருவன மீதினி லமிர்தவாழ் கெங்கையில்
சொரூபமாய் நீங்கள் சுனையாடும் வேளையில்
வரும்வழி மீதுங்கள் வாய்மொழி மதங்கண்டு
கருவது கொண்டுநீர் காட்டினி லீன்றிடும் (பிள்ளை)

உறுவன மீதிலென் உபாயத்தை யறியாமல்
முறுவல்செய் தென்னைநீர் மொழிந்தது கண்டுநான்
இறுவான மேலோக எழுபுவி உயிரெனப்
பெறுகநான் செய்திடப் பேணியே நீர்பெற்றப் (பிள்ளை)

விருத்தம்


மடமயில் மாதே நீங்கள் வந்தென்னை நெருக்க வேண்டாம்
தொடவும்நீர் ஞாய மில்லை தூரவே யகல நின்று
அடவதில் பெற்ற பிள்ளைக்(கு) அடையாள மறியச் சொன்னால்
உடனிப்போ மதலை தந்து உலகமு மருள்வோ மென்றார்

விருத்தம்


அய்யனே குருவே யெங்கள் ஆதியே சோதி யான
மெய்யனே வொப்பில் லாத வேதநன் மணியே கேள்மோ
வெய்யநல் மதலை யீன்று வெட்கமு மிகவே யாகிக்
கையது தப்பி யோடக் கண்டமோ மதலை யென்றார்

சிந்து (பல்லவி)


மதலையைத் தாருமையா - நாங்கள் பெற்ற
மதலையைத் தாருமையா

அனுபல்லவி

மதலையைத் தாருமெங்கள் வயிறெல்லாங் கொதிக்குது
குதலைமொ ழிகள்கேட்டுக் கொஞ்சிக் குழைந்திருக்க (மதலை)

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi