அகிலத்திரட்டு அம்மானை 14161 - 14190 of 16200 அடிகள்
நடக்கும் வழிதனிலே நாயகியோ கேகேட்பார்
வடக்குநா டுநமக்கு வசந்தான் வழிநடப்பு
தெச்சணா பூமி திசைமாற்ற மாயிருக்கும்
பச்சை வளையணிந்த பாவையரே பார்த்துநட
திக்குத் திசைகள் தெரியுதில்லை யென்பேத்தி
முக்கொரு மூலைதன்னை முன்னாடிப் போவோமென
வாரிக் கரைவழியே வாய்த்தநேர் மேற்காகக்
காரிருளாகு முன்னே கால்விரைவாய்ப் போவோமெனச்
சொல்லச் சிறுகன்னி தியங்கிமெள்ள வாயுரைப்பாள்
அல்லல் வினையோ ஆண்டவன் தன்செயலோ
வெளிகாணா தேயிருந்த மெல்லி வெளியில்வந்தால்
வழிதான் தெரியுமோகாண் மாபெரிய போத்தியென்றாள்
பதறாதே பெண்கொடியே பகவான் துணையுண்டுமடி
இதறாதே நாமள் இவ்வழியே சென்றாக்கால்
தெச்சணத்தில் பள்ளிக்கொண்டு தெய்வமட வார்களையும்
நிச்சயம் மணம்புரிந்த நீலவண்ண ருண்டுமடி
கலங்காதே கண்ணே கடற்கரையே போவோம்
விலங்காம லிவ்வழியே மேற்குநோக் கிப்போவோம்
என்றுசொல்லி மாதை இளக்கிமிகப் போகையிலே
அறைந்த வாரி அதற்கு வடபுறமாய்
இடம்மான வோசை டகுடகா வென்றுமிக
இடம்மானம் நாகசுரம் இரைச்சல் மிககேட்டுச்
சற்றே பொறுபேத்தி சத்தமொன்று கேட்குதிங்கே
மெத்த இரைச்சல் மேளத் தொனிகேட்குக்
குரவை யொலியும் குத்து வெடியுங்கேட்குப்
பரசா திக்குரல்கள் பலவிதமாய்க் கேட்குப்
பார்த்து நடப்போம் பாதைவிட் டுவிலகிச்
சேர்ந்து வடக்கேறி தான்பார்த்துப் போவோமென
என்றுரைக்கப் போத்தி இயம்புவாள் நாயகியும்
நன்றுநன்று கிழவா நடவுமுன் னேயெனவே
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 14161 - 14190 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi