அகிலத்திரட்டு அம்மானை 12691 - 12720 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 12691 - 12720 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நாவாணர் போற்ற நாரா யணர்மகனை
பாற்கடலி லுள்ள பாலமிர்தந் தான்வருத்தி
ஆர்க்க முடனே அருமைமக னைமூழ்க்கி
அழுக்கைத் துடைத்து அஞ்சாட்சர மருளி
முழுக்காட்டி மகனை உகந்தமுகத் தோடணைத்து
வேதப் புரோகி விளங்கி மிகவாழ்த்த
நீதம் நிறைந்த நீலநிற மண்டபத்தில்
தங்க மணியரங்கில் சமையக் கொலுவதிலே
மங்காத ஈசுரரும் மாதவனுந் தேவர்களும்
சத்தி யுமையும் சரசு பதிமாதும்
முத்தியுள்ள தேவர் முனிமார் ரிஷிமாரும்
எல்லோரும் நன்றாய் இறைஞ்சி முறையுமிட
நல்லோர்க் ளெல்லாம் நாடி மிகஇருக்க
வல்ல திருமால் மகனை முகம்நோக்கி
செல்ல மகனே சிறந்ததேதி வந்ததினால்
திருநாள் நடத்தித் தெருவீதி தான்வரவும்
ஒருவாரந் தன்னில் ஒருநா ளிடைவிடாமல்
நித்தந் திருநாள் நீநடத்தி யென்மகனே
சக்திகன்னி மாரைத் தான்வருத்தி மாலையிட்டுக்
கலியாண மங்களங்கள் காட்சித் திருநாளும்
சலியாமற் காசுத் தந்தவர்க ளுண்டானால்
வேண்டிநீ தர்மம் விரைவாய் நடத்தியிரு
ஆண்டத் திருநாள் அதுமுடக்கம் வராமல்
பிச்சிவெள்ளை பச்சரிசி மிளகிலை தேங்காயும்
மிச்சம்பழஞ் சந்தனமும் மிகுபன்னீர் வாடைகளும்
மேற்கட்டி கட்டி மிகுவா யலங்கரித்து
மாற்கட்டுச் செய்து மகிழ்ச்சை டம்மானமிட்டு
இந்தப் படியாய் ஏழுநாளுந் திருநாள்
அந்தப் படிசெய்து அவனியி லாடிக்களித்து
எல்லா முறையும் இயல்பாகக் கொண்டாடி

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi