அகிலத்திரட்டு அம்மானை 16051 - 16080 of 16200 அடிகள்
விருத்தம்
ஆணுடன் பெண்ணும் பெற்று அதிகமாய்ச் செல்வ மாகித்
தாணுட நினைவு முற்றுத் தர்மமும் நெறியுங் கற்று
வேணுநீள் கால மெல்லாம் ருடனே வாழ்ந்து
பூணுதல் கமல நாதன் பொற்பதம் பெற்று வாழ்வீர்
நடை
மனுக்க ளவர்க்கு வாய்த்தசட்ட மீதருள
தனுக்கள் பெரிய சந்தமிரு கங்களுக்கு
ஒன்றாகக் கூடி ஒக்க வொருஇனம்போல்
நன்றாக வோர்தலத்தில் நன்னீர் குடித்துமிக
வாழ்ந்திருங்கோ வென்று வைந்தர்மிகச் சட்டமிட்டார்
மெச்சிக் குழைந்து மேவி யொருஇனம்போல்
பட்சி பறவைகட்கும் பாங்காகச் சட்டமிட்டு
ஊர் வனங்களுக்கும் ஒருப்போலே சட்டமிட்டு
பாருகத்தில் நீங்கள் பசுமையாய் வாழுமென்றார்
தேவ தெய்வார்க்கும் தேவ ஸ்திரிமார்க்கும்
மூவர் முனிவருக்கும் முக்கோடித் தேவருக்கும்
எல்லோர்க்கும் நன்றாய் இயல்பாகச் சட்டமிட்டு
வல்லோர்க ளான வைகுண்ட மாமணியும்
செங்கோ லுமேந்தி சிங்காசன மிருந்து
மங்காத தேவரம்பை மாத ரிருபுறமும்
சிங்கார மாகத் தேன்போல் மரைவீச
சான்றோர்க ளேவல் தனதுள் அகமகிழ்ந்து
நின்றேவல் செய்து நித்தம் பணிமாற
கட்டியங்கள் கூறி கவரி மிகவீசக்
கெட்டியாய்ச் சான்றோர் கிருபை யுடன்மகிழ்ந்து
பாவித்து நித்தம் பரமவை குண்டரையும்
சேவித்துப் போற்றி தினமேவல் செய்திடவே
கன்னியர்க ளோடும் காதலாய்த் தானீன்ற
மன்னதிச் சான்றோர் மக்கள் மனைவியோடும்
ஆதி வைகுண்ட ஆனந்த நாரணரும்
நிதியாய்த் தர்மம் நேரோர் மணிதூக்கிச்
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 16051 - 16080 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi