அகிலத்திரட்டு அம்மானை 15871 - 15900 of 16200 அடிகள்
களித்தே விழிஞானக் கண்ணுமிகஅருளி
நல்ல மனுக்களுக்கு நாலுவர முங்கொடுத்துச்
செல்ல மனுக்கள் தேகமது பொன்னிறமாய்
கல்வித் தமிழ்ஞானக் கலைக்கியா னமுதல்
நல்விச் சிறப்பாய் நாடியவர்க் கீந்து
தெய்வ மடவார் வரவழைத் தேழ்பேர்க்கும்
வையம் அளந்தோர் வரவழைத்தேழ்பேருக்கும்
பெற்ற மதலையெல்லாம் பிரமாண மாய்த்தெரிந்து
பத்திரமா யேழ்பேர்க்கும் தரந்தரமாய்த் தானீந்து
வைகை தவிலிறந்த மக்கள்வரை நாரணரும்
தையலவ ரேழ்பேர்க்கும் தான்தெரிந் தீந்தனரே
ஏழுபேர்க் குமதலை இனமினமாய்த் தான்கொடுத்து
வாழுங்கோ புவியில் வயதுபதி னாறெனவே
எல்லோரும் நன்றாய் இருந்து வொருஇனமாய்
நல்லோராய்ச் சாகாமல் நீடூழி காலமெல்லாம்
ஆணுபெண் ணுடனே அதிகப்பல பாக்கியமும்
காணக்காண நீங்கள் கௌவையற்று வாழுமென்றார்
பட்சி பறவை பலசீவ செந்துகட்கும்
அச்சமில்லாப் புவியில் அல்லல்வினை யில்லாமல்
பெற்றுப் பெருகிப் பிதிரெல்லா மோரினம்போல்
ஒத்து மிகக்கூடி ஒருதலத்து நீர்குடித்து
வாழ்ந்திருங்கோ தர்ம வையகத்தி லென்றனராம்
சார்ந்திருங்கோ வென்று தாமன் விடைகொடுத்தார்
நல்லபூச வாச நளிர்விருட்ச மானதுக்கும்
அல்ல லகற்றி அமர்ந்துமிக வாழுமென்று
தில்லையா டும்பெருமாள் சொன்னா ரதுகளுக்கு
புற்பூடுங் கூடிப் பொருந்திமிக வாழுமென்று
நற்பூ டதற்கு நவின்று விடைகொடுத்தார்
அசையாமல் வானம் அதுநேர் நிலவுடனே
பிசகான தில்லாமல் பொழுதுமிகச் சாயாமல்
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 15871 - 15900 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi