அகிலத்திரட்டு அம்மானை 15931 - 15960 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 15931 - 15960 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மன்ன ரவரவர்க்கும் மாலை யுடன்புரிந்து
பொன்னம் பலர்க்கும் பெரிய பொருளதுக்கும்
தன்னம் பெரிய சதாபிரம னானவர்க்கும்
நாதன்மார்க் கெல்லாம் நல்ல மணம்புரிந்து
மாதவர்க ளான வாய்த்ததே வாதிகட்கும்
ஆதவ நாதன் அரிகேச வன்தனக்கும்
இப்படியே மங்களங்கள் எல்லோருங் கொண்டாடிச்
செப்பமுள்ள நாயகிமார் சேர்ந்தங் கொருப்போலே
சரசு பதிமாது தண்டரள சுந்தரியும்
விரச குழலுமையும் வீரமகா லட்சுமியும்
வாய்த்த பகவதியும் வாழுகின்ற பார்வதியும்
ஏற்றபுகழ் தெய்வ இளங்குழலா ரேழ்பேரும்
வள்ளி தெய்வாணை வாயீசொரி யுடனே
தெள்ளிமையா யுள்ளத் தேவி பராபரையும்

விருத்தம்


இந்தமா தர்கள் வந்தபோ திலே யாகியத் தெய்வமா தர்கள்
முந்தநாங் களு மீன்றபா லரை முற்றுமா தவம்போல வளர்த் திடும்
சிந்தர்மா மணி தெய்வநா யகி தேவி காளி வராகி சுந்தரி
இந்த மங்கள மானதிற் கண்டிலேம் öங்கள் நாயகா என்றவர் போற்றினார்

விருத்தம்

போற்றுமா தரைப் பார்த்துநா தனும் போத மாமென வரமிது கூறுவார்
சாற்றுமா தரே தைய லேழ்வரே சந்த மாகிய அந்தரி யானவள்
பார்த்துன் மைந்தரைக் காத்திடா மலே பாலரண் டுயி ரிப்படி யானதால்
ஏற்றுக்கௌவையாய் வீற்றிருக்கிறாள் எண்ணந்தீர்த்தவள் தன்னை யழைக்கிறேன்

நடை

பெண்ணேகே ளுன்றன் பிள்ளைரண்டு தன்னுயிரைக்
கள்ளக் கவுசலமாய்க் கரிகாலச் சோழனவன்
கொன்னதினாற் காளி கூண்ட மனமிடைந்து
என்னிடத்தில் வந்து இவ்வளமை யுமுரைத்துப்
பாலர் முழித்துப் பரம்பெரிய வைகுண்டரும்
சீலமுள்ள தர்மச் சீமையர சாளுகையில்
வருவே னதுமட்டும் வடவா முகமதிலே
குருவே துணையெனவே குவிந்திருப்பே னென்றிருந்தாள்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi