அகிலத்திரட்டு அம்மானை 13561 - 13590 of 16200 அடிகள்
வல்லகுலச் சான்றோர் மாதா பிதாவதுக்கும்
கொடுத்தாரே நல்லக் குவலயத்தில் மக்களெல்லாம்
விடுத்ததெல்லாம் வேண்டி மிகவேற்றார் மாயவரும்
பலன்பெற்றோ மென்றுப் பாலதியச் சான்றோர்கள்
குலமெல்லாம் வந்து கூடினார் மாயனிடம்
அப்போது நாதன் ஆனந்த மேபுரிந்து
இப்போ திருநாள் இகனைநடத்த வென்று
நாளான நாளிதுதான் நாதன் பிறந்தநாள்
தாழாத ஞாயிறுவே சுவாமி பிறந்ததினால்
இந்நாள் முதல்திருநாள் இன்ப முடனடத்திப்
பொன்னான நாரணரும் பூரித்தா ரம்மானை
ஞாயிறாழ்ச்சைத் திருநாள் நாம்பார்க்கப் போவோமெனத்
தேச மதிலுள்ளத் தெய்வகுலச் சான்றோர்கள்
பாலுக்கு நெல்லும் பண்பாய்ச் சிறுமணியும்
மாலுக்கு நல்ல மகிழ்ந்துபிச்சி மாலைகளும்
கொழுந்துபன்னீர் சந்தமமும் குலுங்கா விடலைகளும்
பழுப்பான மாம்பழமும் திகட்டாப் பலாக்கனியும்
வாழைக் கனியிலையும் வகிர்ந்தகமு கின்குலையும்
நாளைத் திருநாள் நமக்குமுந்திப் போவோமென
இத்தனையுங் கொண்டு இசைந்ததிரு நாள்வகைக்குப்
பத்துமூ ணேழு பணமு மிகஎடுத்துக்
காதுக்கு நல்ல கனத்த நகைகளிட்டு
மாதுக் கியல்வாய் வளர்கோர் வையுமணிந்து
பெட்டிச் சீலையுடுத்துப் பெரியநாமப் பொட்டுமிட்டுக்
கட்டன்ன மும்பொதிந்து கண்ணர்திரு நாட்கெனவே
மக்கள் மணவாளன் மனைவி கிளைகளுடன்
சிக்கெனவே நாதன் திருநாட்கும் போவோமென
வருவார் கிழமை மாதந் தவறாமல்
திருமால் அகமகிழ்ந்து திருநாள் முறைநடத்தக்
கொட்டகை யிட்டுக் குவிந்தமணி மேடையிட்டுப்
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 13561 - 13590 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi