அகிலத்திரட்டு அம்மானை 15121 - 15150 of 16200 அடிகள்
சொன்னாரந்தச் சுகமாலழைத்தாரென
அன்றுவைகுண்டர் அதற்கேது சொல்லலுற்றார்
நல்லது தானென்று நவின்றவரை யும்புகழ்ந்து
செல்ல அரைமணிக்கு சென்றிங்கே நில்லுமென
மாதர் தனைமறந்து வாழ்வை மிகமறந்து
தாத ரூண்மறந்து சடல வுடைமறந்து
நன்மைபல சோபனமும் நளிப்பேச்சு மறந்து
செம்மைக் குருவாய் செம்மிமூ லமடக்கி
மூல மதிலடக்கி உடலூற்றைத் தானிறக்கிக்
காலை மடக்கிக் கண்ணனூர் தானோக்கி
கைக்குள்நின்ற மக்கள் கலங்கி மிகப்பயந்து
நிற்கும் நினைவை நினைவி லறிந்துவைத்து
நடக்கும் படியான நல்மொழிக ளுமுரைத்து
உடற்குள் குறியாய் ஒத்துமிக வாழுமென்று
சொல்லிமக்கள் கையைத் திருமுகத்தோ டேசேர்த்து
இல்லியல்பாய் வாழும் யாமுழித்து வாறோமெனப்
பதறாமல் நீங்கள் பண்பா யொருப்போலே
சிதறாமல் நீங்கள் செய்யஅனு கூலமுமாய்
இருந்துமிக வாழும் என்றுநாமங் கொடுத்துத்
திருந்துபுகழ் மாயன் சிறந்தவோ ராயிரத்து
ஓரிருபத் தாறாம் ஓங்கு மிடபமதில்
சீரியல்பா யான தேதி யிருபத்தொன்றில்
பூருவ பட்சம் பூச நட்சேத்திரத்தில்
வாறுடைய சோம வாரம் பொழுதூர்ந்து
பன்னிரண்டு வேளை பாவிக்கும் நேரமதில்
மெய்கொண்ட சான்றோர் மேலாசை யுள்ளிருத்திக்
கைகண்ட மாமுனிவர் கட்டாய் மிகச்சூழ
வைகுண்ட மேக வழிகொண்டா ரம்மானை
வைகுண்ட மானார் வாய்த்த விமானமோடு
வான லோகத்தார் மலர்மாரி தாந்தூவ
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 15121 - 15150 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi