அகிலத்திரட்டு அம்மானை 15421 - 15450 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 15421 - 15450 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தான்முனிந் தாகமத்தின் தன்மை யதின்படியே
தொடுத்த கலியன்று தோன்றி குதித்தவரைக்
கொடுத்தகணக் கின்படியே கொல்லக் கலிதனையும்
வானமது குழவி மண்பூமி யம்மியெனத்
தானமது நிரப்பாய்த் தன்னா லிருந்திடவும்
உண்டான தெல்லாம் உடன்கரிந்து நிறீடவும்
அண்ட ருலகம்வரை அசைந்து முழித்தடவும்
மாயவரு மீசர் வைகுண்ட மாமணியும்
தாய்தமர்க ளானச் சத்தி திருவுடனே
வைகுண்ட ரான மகனை நடுநிறுத்தி
மெய்குண்டத் தேவர் மிகுகூல மாகிவர
முத்திச் செங்கோலும் முழிப்புச்சங் கும்பிரம்பும்
பத்தியுள்ள நாரணர்தான் பாலனுட கைக்கொடுத்து
ஆகாய மாக அவர்கள்மிக வந்துநிற்க
வாகாக நாரணரும் மகனை முகம்நோக்கி
நல்ல மகனே நாடுந் தவத்தோனே
செல்ல மகனே திருபெற்ற கண்மணியே
உநத்னக்கு ஏற்ற உற்ற மனிதர்களும்
சந்தமுள்ளத் தேவியரும் தனதுகந்த புற்பூடும்
ஆகின்ற பட்சிகளும் ஆன மிருகமதும்
பாகுசெறி விருட்சம் பண்பான நற்பதியும்
யாதாக முன்னே யாமமிட்ட நூற்படியே
நீதான் வருகவென நினைத்துவிடும் என்மகனே
நினைத்தார் வைகுண்டர் நினைவின் படிபோலே
மனத்தயவு கூர்ந்து மலமலென நல்மனுவோர்
முழித்தார் வைகுண்டர் மொய்குழலார் மக்களுமே
களித்தே யிருந்த கருத்தின் படியாலே
பட்சி மிருகம் பலமிருகச் செந்துக்களும்
அச்சுதர்க கேற்ற ஆதி விருட்சங்களும்
புதுப்பூமி புதுநிலவு புதுவானம் புதுவாயு

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi