அகிலத்திரட்டு அம்மானை 15061 - 15090 of 16200 அடிகள்
உயிரறிந்து நல்ல விலைகூறி ஆளடிமை
மெய்தறிந்து நாதன் முழுதடிமை கொண்டனராம்
கொண்ட அடிமை குலச்சாதி யானோரை
அண்ட மறிய ஆகந்தெளிந் தெடுத்துச்
சேர்த்துவைத்துக் கொண்டார் சிவஞானப் பொக்கணத்துள்
காத்தந்தப் பெண்களுடக் கற்பறிய வேணுமென்று
பெற்றுவந்தத் தீர்ப்பின் பிரமாணத் தின்படியே
சித்துவொன்று செய்யச் சிந்தைதனி லுற்றனராம்
உற்று மனதில் உபாய மதுவாக
வஸ்து வகைபேரில் மகாநேட்ட மாயிருந்து
பொன்னு பணங்காசு பெரிய நிலமதிலும்
தன்னுள் நினைவாய்த் தானிருந்தா ரம்மானை
அய்யா வைகுண்டம் எழுந்தருளல்
விருத்தம்
இப்படி இவர்தான் பாரில் எண்ணிய கரும மெல்லாம்
ஒப்புடன் முடித்துத் தன்னால் ஊணிய தெல்லாந் தோண
வைப்பபுடன் யாமங் கூறி மனுக்களைத் தெளித்து ஏற்று
இப்புவி விட்டுக் குண்டம் ஏகிட மனதி லுற்றார்
விருத்தம்
ஏகிட மனதி லுற்று இருக்கின்ற உபாயந் தன்னை
வாகிட மிருக்கு மாதர் மனைவிகள் மக்கள் சான்றோர்
தாகிடச் சீசன் மார்கள் தங்களு மறியா வண்ணம்
கோகிடக் குண்டஞ் செல்லக் குருவையும் நாட்ட மானார்
விருத்தம்
மனதினி லுற்று மாயன் மாதர்கள் மக்க ளோடு
தனதுள மகிழ்ந்து கூடித் தயவுட னிருக்கும் போது
என்துடல் காணா வண்ணம் இன்னமுஞ் சிலநாள் பாரில்
தினமுடல் வாடி நீங்கள் தேடுவீ ரென்னைத் தானே
விருத்தம்
தேடியே யிருக்கும் போதுத் தேவியர் மக்கள் காண
நாடியே சொரூபங் கொண்டு நான்வந்து நடுக்கள் கேட்பேன்
பேடிகள் நினைத்தி டாமல் பேசின நூற்போல் கண்டால்
வாடியே மலையா வண்ணம் வாழ்தர்மப் புவியில் வாழ்வோம்
விருத்தம்
என்றவர் சிரித்துக் கொண்டு இருந்ததைக் கவனி யாமல்
விண்டவர் நளியாய்ப் பேசி விடுத்ததை மக்கள் சான்றோர்
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 15061 - 15090 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi