அகிலத்திரட்டு அம்மானை 13891 - 13920 of 16200 அடிகள்
வந்து வளர்பதியில் வாழ்ந்துண் டினிதிருப்பார்
சந்தோ சமாகத் தண்மை வெகுகுணமாய்
இப்படியே பெண்களோடு இகனை மிகநடத்தி
ஒப்புரவாய் மாயன் உகந்துண் டிருக்கையிலே
செந்தூ ரலையில் தேவனுதித் தன்றுவந்து
முந்துமூலப் பதியில் உவரிக் கரையிடத்தில்
சென்றங் கிருந்து சிவலிங்கத் தானமைத்து
மன்றுக்குள் கொஞ்சம் மறைத்துவைத்து மாயவரும்
நான்தவ சிருந்து நாட்கள்கொஞ்ச மேகழித்து
வான்புதுமை யற்புதங்கள் மாநிலத்தோர் தாமறியச்
செய்துதெய்வ மாதர்களைச் சிறந்த மணமுகித்து
தெய்திதனி லிங்கே திருநாளைக் கொண்டாடி
வருவே னெனச்சிலைக்கு வாக்குமிகக் கொடுத்துத்
திருவேற்றி வைத்த தேதியின்று வந்ததென
சும்மா இவரைத் திருப்பதியில் வாநீயென்று
நம்மா லுரைத்தால் ஞாயமில்லை யென்றுசொல்லிக்
கொஞ்ச மொருசூத்திரம் கூர்மையாய்ச் செய்யவென்று
அஞ்சலெனச் சாமளாத் தேவிதனை யழைத்துக்
கன்னியிலே ரண்டு பேரைக் கலக்கமிட்டு
என்னுடைய மக்களிலும் யாம முறைப்படியே
கொஞ்சமது வாந்தி கொடுத்துயிரைத் தான்வாங்கி
மஞ்சறை யில்வைத்து வாகாகக் காருமென்று
விடைகொடுக்க நாதன் வேண்டினாள் தேவியவள்
திடமுடனே சொன்ன சொல்வாக் குரைப்படியே
கன்னியரில் ரண்டு கடத்தினாள் மாதேவி
மின்னி னொளிமதலை வீரத் தனமாக
நாலுமூ ணுடனே நகட்டினாள் மாதேவி
மாலுடையதேவி மடந்தைகளிமொழியும்
உடனே சனங்கள் உடையவரே தஞ்சமெனத்
தடமேலே வீழ்ந்து சுவாமி அபயமென்றார்
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 13891 - 13920 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi