அகிலத்திரட்டு அம்மானை 12661 - 12690 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 12661 - 12690 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தவசு நிறைவேறி தான்வந்த தாலேயினி
பவிசு வுனக்குப் பகருகிறேன் கேளெனவே
அருகில்வைத்த மாமுனியை அழைத்தார் திருமாலும்
துரிதமுடன் மாமுனிகள் சுவாமி யெனத்தொழுதார்
இந்தநாள் வரைக்கும் இவரிருந்த நற்றவசு
சந்தமோ வீணோ தாமுரைப்பீர் மாமுனியே
அப்போ முனிகள் ஆதி யடிபணிந்து

முட்டப்பதி விஞ்சை - 2


தப்பெருநா ளில்லை தவத்துக் குறுதியுண்டு
நூலொழுக்க மல்லாமல் நுண்ணிமைகள் தப்பவில்லை
மாலொழுக்க மல்லாமல் மனதுவே றில்லையையா
தப்பாத தவத்தில் சண்டித் தடிநீசன்
சிப்பாயி விட்டுச் சுவாமி தனைப்பிடித்து
முடித்தலையைப் பின்னி முழுநீசப் பாவியவன்
அடித்து விலங்கில் அவன்கொண்டு வைத்தனனே
வைத்துப்பல வேதனைகள் மாநீசன் செய்ததல்லால்
மெய்த்தபுகழ் மாலே இவர்மேலே குற்றமில்லை
என்று முனிமார் இசையத் திருமாலும்
கொண்டுபோய் நீசன் கோட்டிசெய்த ஞாயமெல்லாமல்
இருக்கட்டு மந்த இழிநீசன் செய்ததெல்லாம்
குருக்கட்டு முறையின் குணத்தைமிகச் சொல்லுமென்றார்
உடனே முனிகள் உள்ள மிகமகிழ்ந்து
படபடென நின்று பணிந்து மிகப்போற்றித்
தப்பில்லை யையா தவத்தி லொருபங்கமில்லை
என்று முனிகள் இகபரத்துக் குத்தமமாய்
அன்று உரைக்க அதகத் திருநெடுமால்
நல்ல தெனவே நன்மகனைத் தானாவி
செல்ல மகனே செகலத்துகுள் வாநீயென
மகனை மிகக்கூட்டி வாரிக்குள் ளேநடக்கத்
தவமுனிவ ரெல்லாம் சங்கீதம் பாடிவர
பாவாணர் பாட பரமுனிவர் தாம்பாட

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi