அகிலத்திரட்டு அம்மானை 15481 - 15510 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 15481 - 15510 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

புண்ணியமாய்த் தருமம் புரிந்து மிகவருளிக்
காணிக்கை கைக்கூலி காவடி யும்நிறுத்தி
ஆணிக்க மாக அம்புவியில் யாவரையும்
ஒருதலத்தில் விட்டு உற்றபுத்தி சொன்னேனே

நடுத்தீர்ப்பு - தர்மயுகம்

இருபுத்தி யால்நீயும் என்னைப் பிடித்தடித்தாய்
கட்டியென்னைப் பேயனெனக் கடுவிலங்கில் வைத்தாயே
அட்டிசெய்ய வில்லையல்லோ ஆண்டியாய் நானிருந்து
பண்டார மாகப் பார்மீதி லன்பரிடம்
நன்றாகப் பிச்சை நான்வேண்டி யேகுடித்துத்
தர்மமா யல்லோ சனங்களுக்கு ஞாயமுண்டோ
வர்மமா யென்னை வந்தடிக்க ஞாயமுண்டோ
அல்லாமல் முன்னே அரனிடத்தி லாணையிட்டு
எல்லா மினிமேல் இராச்சியத்தில் யாதொருவர்
பண்டார மென்று பாரறிய வந்தவரை
அண்டே னவரை அட்டிமிகச் செய்யேனென்று
ஆண்டிகளை நானும் அட்டிமிகச் செய்ததுண்டால்
கூண்டிறந்து போவோம் கொடிப்பிதி ரானதெல்லாம்
சேனைத் தளமிழந்து செல்வமது தானிழந்து
ஏனைக் குழலோடே என்கிளைக ளெல்லோரும்
தன்னா லிறந்து சளநரகம் போய்விடுவோம்
முன்னாள் நீசொல்லி மொழிந்தாணை யின்படியே
பண்டாரந் தன்னைப் பதைக்க விடாதபடி
அண்டாமல் நீயும் அடித்ததினால் ஞாயமென்ன
சொல்லடா நீதான் சொன்னமுறைப் படியே
கல்லடா நீதான் கவிழ்ந்துநிற்கும் ஞாயமென்ன
பாவிநீ யேழ்பிறவி பார்மீதில் தோன்றியதில்
ஆவி யறிய அனுப்போலும் நன்மையது
செய்ததுண்டோ சொல்லு செவியுனக்குக் கேட்கலையோ
மெய்தெரிய யிப்பிறவி மிகுஇரப்பன் போல்நானும்
எளிய குலத்தில் எகாபரனே தஞ்சமெனச்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi