அகிலத்திரட்டு அம்மானை 15751 - 15780 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 15751 - 15780 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மறுத்து உரையாமல் வனமதிலே போயிடுங்கோ
என்றாயே நீயும் இருவரையு மப்போது
அன்றே யவர்கள் அயர்ந்து மிகவிருக்க
அப்போது என்னுடைய ஆதிசீதா லட்சுமியை
நற்போ டுயர்ந்த நாயகியை நான்தேடி
அனுமன் தனையும் அங்கே அனுப்பிவைத்துத்
தனுவான வாளி தார்குழற்குத் தானீந்து
உன்கோட்டை வாசலிலே உடனேநான் வந்துநின்று
என்கூட்டி லான ஏற்றசீதா லட்சுமியை
விடுநீ யென்றேனே வீணாய் கேளாமல்
படுவ தறியாமல் படையெடுத்தா யென்னோடு
சகோதரனாய் பிறந்த தம்பியர்கள் சொன்னதுபோல்
மகோதரன் மகள் மண்டோதரைச் சொன்னாளே
அப்போதுன் தம்பி ஆன விபீஷ்ணனும்
நற்போடு என்னை வந்துமிக நவ்வியவன்
பொல்லாத பாவியுடன் பிறந்ததோ சங்கழித்து
எல்லாம் பொறுத்து எனையாண்டு கொள்ளுமென்றான்
நல்லதுதா னென்று நானவனை யுமேற்றுப்
பொல்லாத பாவியென் பெண்ணைவிடு என்றேனே
பாவிநீ கேளாமல் படையெடுத்து வந்தனையே
தாவிநீ விட்டச் சரங்களெல் லாந்தடுத்து
என்கை யினாலே எடுத்து வொருபாணம்
சங்கையுட னெய்து தலையறுத்தே னுன்றனையும்
உன்னா லுன்படைகள் உயிரழிந்து மாண்டபின்பு
முன்னா ளுரைத்த மொழிகேட்டே னுன்னோடு
அப்போது பாவி அதற்கேது நீயுரைத்தாய்
இப்போது என்னுடைய ஏற்றதம்பி தானொருவன்
உன்னோடு சேர்ந்து உயிர்ப்பெலங்கள் தானுரைத்துச்
சொன்னதா லென்னுடைய சிரசறுத்தா யல்லாது
ஏலுமோ ராமா இழப்பம்பே சாதேயென்றாய்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi