அகிலத்திரட்டு அம்மானை 14971 - 15000 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 14971 - 15000 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நடத்தும் நருட்கள் நல்லன்ன மீகிறதை
இடத்தில் கொடுவந்து ஈயுங்க ளென்றுமிகச்
சொல்லிநாம் கூட சுவாமி மிகஇருந்து
நல்லமக்க ளோடு நாம்கூடி வாழவென்று
ஆரா தனைச்சொரூபம் அடக்கி னாருள்மனதுள்
ஊரா னதிற்பிச்சை உங்களுட மூப்பாலே
இடஞாய மில்லை என்னிடத்தில் கொண்டுவந்து
இடநாமுங் கூடி இருந்துதர்ம மேற்றிடலாம்
என்றுரைக்க நருட்கள் எல்லோருஞ் சம்மதித்து
கொண்டுவந் திட்டார் கூடிருந்து நாரணரும்
மாதர் மக்களொடு மாயன் மனமகிழ்ந்து
தாதர் இருந்து சாப்பிட்டா ரம்மானை
கூடி யிருந்து குலாவி யமுதேற்றுப்
பாடி மகிழ்ந்து பரமன்வரும் நாளையிலே
பின்னும் பெருமாள் பிள்ளைகளைத் தான்பார்த்து
மன்னும் பெரிய மக்கள்மக்கள் மாதர்களே
உங்களுட வீட்டில் உற்ற விருந்தருந்த
மங்களமா யென்றனக்கு மாவிருப்ப மாயிருக்கு
நான்வந்து தென்பேரால் நாட்டுமிணத் தாங்கல்களை
தான்வந்து பார்க்கச் சந்தோச மாயிருக்கு
என்றுரைக்க அய்யா இசைந்தகுலச் சான்றோர்கள்
நன்றுநன் றெங்கள் நாரா யணக்குருவே
எப்போ நீர்வந்து இரட்சிப்பீ ரென்றுமிகத்
தற்பரனே நாங்கள் சடைத்து முகங்கோடி
மலைகாணாப் பயிர்போல் வாடி யிருந்தோமையா
பிழையா னதுபொறுத்துப் பிள்ளைகளை யாண்டுகொள்ளும்
ஆண்டுகொள்ளு மையா ஆதி மகாபரனே
பூண்டுகொண் டோமுமது பொற்பாதம் நாங்களெனத்
தொழுது வணங்கி சுவாமிவர வேணுமென்று
முழுது மவர்மனையில் முகூர்த்தமுறை பந்தலிட்டுப்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi