அகிலத்திரட்டு அம்மானை 15151 - 15180 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 15151 - 15180 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

விமான மதிலேறி மேலோக மீதில்வரத்
தேவாதி யெல்லாம் திருப்பாட்டுக் கூறிவர
மூவாதி யெல்லாம் முகமலர்ந்து தாமிருக்கத்
தெய்வரம்பை மாதர் திருக்குரவை தாம்பாட
மெய்வரம்பு நாதன் மெய்குண்ட மீதில்வந்தார்

விருத்தம்


வந்த பொழுதே மறையோரும் வானோர் தேவ ரிஷிமாரும்
நந்தன் பெருமாள் மகனெனவே நாடி வணங்கி மிகப்போற்றி
எந்தன்பிரனே யெங்களுக்கு இரங்கியெ மையாட் கொண்டவரே
சிந்த ரெவரு மிகப்போற்றித் திருமால் மகனைக்கண் டாவினரே

விருத்தம்


கண்டே மகனை மிகஆவி கமல முகத்தோ டுடனணைத்துப்
பண்டே செகலில் மகரமதுள் பண்பா யிருத்திய ருளிவைத்த
நன்றோர் மொழியுங் குறையாமல் நடத்திக் கணக்கின் பிரகாரம்
இன்றே யெழுந்திங் கேகிவந்த இளமான் கன்றென் றாவினரே

நடை


ஆவி மகனை அன்போ டுறவணைத்துத்
தாவி மகன்மேல் தயவு மிகக்கூர்ந்து
மாமுனிவர் தங்களையும் வாருங்கோ நல்லதெனத்
தாமுனிந்து மகன்மேல் தயவாகத் தாயாரும்
அன்பு மிகக்கூர்ந்து அருமைமக னையாவி
இன்புருக நன்றாய் இருந்தாள்காண் லட்சுமியும்
சந்தோசமாக சங்கரருந் தான்மகிழ்ந்து
வந்தாயோ என்று மகிழ்ந்துகொண்டா ரம்மானை
நான்முனிவனும் வேத நல்லதெய் வேந்திரனும்
தாமு மிகமகிழ்ந்து சந்தோசங் கொண்டனராம்
சரசு பதிமாதும் தாயீசொரி யாளும்
பரசுரா மன்முதலாய்ப் பண்பாய் மகிழ்ந்திருந்தார்
கயிலை யுகமும் கமண்டல மேழ்புவியும்
அகிலமது அறிய ஆனார்வை குண்டமென
எக்காள பூரிகையும் இடமாம் மானமுடன்
முக்காலத் துள்ள முனிமார் முழக்கிமிக

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi