அகிலத்திரட்டு அம்மானை 15691 - 15720 of 16200 அடிகள்
சொன்னாயேநீயுஞ் சொன்னவுடன் நான்மாறி
பத்து மலையைப் பருந்தலையா யுனக்கு
எத்திசைகள் மெய்க்க ஏற்றதிகக் கைத்திறமும்
கைத்திறமும் வில்திறமும் கணையாளி வாள்திறமும்
புத்திரருங் கூடப் பிறப்போர்கள் தந்திறமும்
மெத்தப் பவிசும் வேண்டும் படையோடே
கொற்றவனா யுன்னைக் குவலயத்தி லேயருளி
உன்னிடுக்கத் தாலே ஒருராம பாணமதால்
கொன்னுன்னை யன்றின்று கூறுமொழி கேட்பேனான்
என்றே யுனக்கு இருந்தவுயி ருமழித்து
அன்றே கிறதா யுகமு மழித்துமிகப்
பின்னுந் திரேதா பெரும்புவி யில்நீயும்
மன்ன னிராவணனாய் மாறிப்பிறந்தாயே
பத்துத் தலையாய் பாவிநீ ராவணனாய்
மற்றும் நிகரொவ்வா வாய்த்ததம்பி தங்களொடும்
சேனைப் படையுடனே செல்வரோடு நீபிறந்து
வானலோ கம்வரைக்கும் மாபாவி யாண்டனையே
ஆண்டிருந்து மல்லாமல் ஆதிசீதா லட்சுமியை
மாண்டிறந்து போங்காலம் மாபாவி நீயவளைக்
கொண்டுபோ யன்னுடையக் கோட்டையதுள் வைத்தனையே
மன்றுதனில் நானும் மாதைவிடு வென்றுசொல்லி
வேண்டுகின்ற புத்தி விதவிதமாய்ச் சொன்னேனே
கூண்டுன்றன் தம்பி கும்பன் விபீஷணனும்
நாரா யணனுடைய நல்லசீதா லட்சமியை
ஆராலே கூடும் அருஞ்சிறையில் வைத்திருக்கப்
பாவிநீ வம்பால் பழிக்கிரையாய்ப் போகாதே
கூவுமொழி சீதைதனை கோட்டைவிட் டனுப்பிவிடு
மாதை விடாதே வம்புசெய்தா யானாக்கால்
பாதகா வுன்னுடைய பவிசெல்லாம் போகுமெனச்
கொன்றுவுன்னையன்று கூறுமொழி கேட்பேனே
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 15691 - 15720 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi