அகிலத்திரட்டு அம்மானை 13531 - 13560 of 16200 அடிகள்
செம்பவள நற்பதியின்-சுவாமி
தெருவலங்கள் சுற்றிவந்தோம்
பொன்பதிக்குள் நாமள்புக்கி - சுவாமி
மறு பொழுதுவந்தால் வருவோமையா
சோபனமே சோபனமே - பெண்ணே
திருநடனச் சோபனமே
தேவர்குரு நாரணர்க்கும் - அவர் தேவியர்க்கும் சோபனமே
பூமலர்ந்த ஈசுரர்க்கும் - அவர் பொன்தேவி மாமதுமைக்கும்
காமனந்த நாரணர்க்கும் - தெய்வக் கன்னியர்க்கும் சோபனமே
பூமடந்தை நாயகிக்கும் - நல்ல பொன்னுமண்டைக் காட்டாளுக்கும்
பார்மடந்தை நாயகிக்கும் - சிவ பகவதிக்குஞ் சோபனமே
தெய்வானை நாயகிக்கும் - நல்ல சிறந்தவள்ளி மடந்தையர்க்கும்
ஐவர்குல நாரணர்க்கும் - கன்னி அரிவையர்க்குஞ் சோபனமே
விருத்தம்
துடியிடைக் கன்னி மாரைத் திருமணந் திருமால் செய்து
குடிபுகழ்ச் சான்றோர் மக்கள் குரவைகள் முழக்கத் தோடு
திடிரெனத் தெருக்கள் சுற்றித் தேவியு மன்ன ராகப்
படிமிசைப் பதியி னுள்ளே பதிந்துவந் திருந்தா ரன்றே
நடை
மாதுநல்லா ரேழ்வரையும் மணமுகித்து மாயவரும்
தீதகலும் நற்பதியில் சிறந்தங்கினிதிருந்தார்
கன்னிமா ரேழ்வரையும் கைப்படித்தோம் நாமுமினி
பொன்னம் பதியில் புகழ்ந்ததிரு நாள்நடத்தி
நித்தந் திருநாள் நிதம்நடந்த வேணுமென்று
சித்தமதில் நாரணரும் சிந்தித்தா ரம்மானை
எத்திசையு முள்ள ஏற்றபுகழ் சான்றோரும்
முத்தி யடைந்தோம் மோட்சமது பெற்றோமென
நம்முடைய தாயார் நல்லதெய்வக் கன்னியரைச்
செம்மைத் திருமால் திருமணங்கள் செய்ததினால்
குற்றமில்லை நம்முடைய குலத்துக் கினியெனவே
சித்தமதில் நாரணனார் செயல்நமக் குண்டெனவே
வந்துமிக எல்லோரும் வாழ்த்தி மிகப்பணிந்து
சிந்துபுகழ் தெய்வ மடவா ரையுந்தொழுது
நல்லபண்ட மானதுவும் நாடும்நிதி யானதுவும்
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 13531 - 13560 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi