அகிலத்திரட்டு அம்மானை 16021 - 16050 of 16200 அடிகள்
செப்பொத்த மாணாக்கர் சேவிக்க இருபுறமும்
ஒப்பற்ற பொற்பதிக்குள் உயர்ந்தசிங் காசனத்தில்
மறுமஞ்ஞ ரெதிரி வையகத்தி லில்லாமல்
விறுமஞ்ஞ ரான வெற்றிவை குண்டருமே
சிங்கா சனமிருந்து தெய்வச்செங் கோல்நடத்தி
பொங்கா ரமான புவிதர்ம ராச்சியத்தில்
ஆளுவா ரென்ற ஆகம நூற்படியே
ஏழுபெண் மக்கள் இனமொன்றாய்த் தான்கூடி
வாழவே ணுமெனவே வாய்த்தசிங் காசனத்தில்
ஆளவை குண்டர் அவரிருந்தார் பொன்மாதே
விருத்தம்
ஆதியாம் வைந்த ராசர் அருள்செங்கோ லேந்தித் தர்ம
சோதியி னொளிபோல் ரத்தினந் துலங்கிய முடியுஞ் சூடி
நீதிபோல் தர்ம ஞாய நெறிபுரிந் தரசே யாள
சாதியா முயர்ந்த சான்றோர் தம்மையே வருத்திச் சொல்வார்
விருத்தம்
மக்களே நீங்க ளெல்லாம் வாழ்பொன்னம் பதியிற் சென்று
முக்கிய மான தர்ம யுகநில மதிலே தன்னால்
கக்கிய பொன்கள் சொர்ணம் கைமனங் குளிர அன்னம்
பொக்கிஷம் நிறைய வைத்துப் புகழவுண் டினிதாய் வாழ்வீர்
விருத்தம்
வாழுவீர் தாழ்வில் லாமல் மக்களுங் கிளைகள் கொஞ்சி
நாளுமே மகிழ்ச்சை கூர்ந்து நலமுடன் வாழும் போது
நீளுமே யெனது செங்கோல் நீதியும் நெறிபோல் வந்து
ஆளுமே யுங்கள் தம்மை அன்புட னலையா வண்ணம்
விருத்தம்
வண்ணமாய்நீத மூன்றும் வரம்பணு விலகிடாமல்
தண்ணமாயிருந்து வாழும் சனங்களே பதறவேண்டாம்
எண்ணமே தொன்றுமில்லை எளிமையும் இல்லை கண்டீர்
திண்ணமாய்த் தன்னந்தன்னால்ச் சிறப்புடனிருந்து வாழ்வீர்
விருத்தம்
உன்னிலும் பெரியோ னாக ஒருவனுள் ளுயர்த்தி கண்டால்
தன்னிலும் பெரியோ னாகத் தழைத்தினி திருந்து வாழ்வீர்
என்னிலும் பெரியோ னீங்கள் யானுங்கள் தனிலு மேலோன்
பொன்னில் வூற்று வீசும் பொன்பதி யுகத்து வாழ்வே
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 16021 - 16050 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi