அகிலத்திரட்டு அம்மானை 15241 - 15270 of 16200 அடிகள்
சோதிமணியே சொல்லொண்ணா ஓவியமே
எந்தன் மணியே என்னாத ஓவியமே
உந்தனை உவரியிலே உற்று பெற்று கலியுகத்தில்
இருத்தி தவமும் ஏற்றமுறை யும்நடத்தி
வருத்தி நருளை மகாசோ தனைப்பார்த்துத்
களித்து கொண்டாடிக் கலிநெகிழ நல்லோரைத்
தெளித்துவா வென்று சொன்ன முறைவரையும்
இருந்துநீ யங்கே இகனை நடத்தினதைப்
பொருந்தும் படியே புகன்றிடுநீ நாமறிய
மாயவர் தாங்கேட்க மனது மிகமகிழ்ந்து
ஞாயக் குருநாதன் நாடி மிகவுரைப்பார்
அய்யரே கோவே அப்புவே நீர்கேளும்
பொய்யர்வாழ் கலியில் புரிந்துத் தவசாக
ஆறு வருசம் அதிகத் தவம்புரிந்து
வாறுமுன் னீரும் வாரியிலே வந்திருந்துக்
கேட்டு மகிழ்ந்து கெணித்ததுமேல் நல்வளங்கள்
தாட்டாண்மையாய் நீரும் தாமொழிந்த சொற்படியே
நித்தந் திருநாளும் நேரிழைமா ருள்ளதையும்
புத்திரரை யுஞ்சேர்த்துப் பெண்களையு மாலையிட்டு
மாலையிட்டுப் பெண்களோடு வாழ்ந்து மகவீந்துக்
கோலமணி மாதருக்குக் கோடிபல வஸ்துவகை
பார்வதிமுதலாய் பதிகைலை மங்கைஎல்லாம்
சீர்பதியில்வைத்து செய்தோம்திருமணங்கள்
தேடிக் கொடுத்துத் தேசக்கலி நாடழிய
ஆடிக் களித்து யாம மிகக்கூறி
நல்லோரை யெல்லாம் நாடித் தெளித்துமிக
வல்லோரே யுந்தன் வைகுண்ட மீதில்வந்தேன்
ஆஸ்தி பலதும் ஆயளைமார் மக்களையும்
கோத்திர முங்கண்டேன் கூறிவைத்த லக்கில்வந்தேன்
அந்தச் சிறப்போடு அங்கிருந்தே னானாக்கால்
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 15241 - 15270 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi