அகிலத்திரட்டு அம்மானை 13801 - 13830 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 13801 - 13830 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

இப்போ வரவில்லையே எப்போ வருவார்கள்
மைப்பெரிய கண்ணே மாதரென் தேவியரே
செப்பினீரே நீங்கள் சென்றமக்க ளெப்போவென்று
பொல்லாத நாட்டுப் பொன்று கலியைமுடித்து
நல்லதர்ம நாடு நான்தோன்ற வைக்குகையில்
நடுஞாயங் கேட்டு நடுத்தீர்ப்புச் செய்யுகையில்
கெடுவேலை செய்த கேள்வியில்லாச் சோழனையும்
ஆக்கினைகள் செய்து ஆழநர கமதிலே
தாக்கியும் மக்களைநான் சடத்தோ டெழுப்பிமிகத்
தருவேன் குருசுவாமி தன்னாணை மாதர்களே
மருவினிய மாதே வாக்கிதுவே தப்பாது
என்றாதி நாதன் ஈதுரைக்க மாதரெல்லாம்
நன்றாய் மகிழ்ந்து நாடிமக்க ளையெடுத்து
மடிமீதில் வைத்து மலர்ந்முகத் தோடணைத்துக்
கண்ணோ மணியோ கரடரா சன்மகனோ
விண்ணோர்கள் மெச்சும் வேதப் பரஞ்சுடரோ
தோணார்க் கரியத் துய்யதிரு மாலீன்ற
சாணாரோ நாயகமோ சகலகலை கற்றவரோ
தெய்வ யுகக்கன்றோ திசைவென்ற சான்றோரோ
வையம் புகழவந்த மக்களே என்றுசொல்லிச்
சந்தோச மாகத் தார்குழலா ரேழ்பேரும்
புந்தி மகிழ்ந்து பூரித் தகமகிழ்ந்தார்
நாங்கள்செய் ததவத்தில் நாலிலரைப் பங்குவரம்
வாங்கினோ மையா மாயவரே யின்னமுண்டு
நாடாள வைக்க நல்லவரந் தந்ததுண்டு
தாடாண்மை யுள்ள சங்கரரும் வந்திருந்து
என்றுரைக்க மாதர் எம்பெருமாள் நல்லதென்று
இன்று வரைத்ததுவும் இலக்கதிலே ஆகுமெனச்
சீதைக்கு நல்ல சிறந்தமக னையெடுத்து
மாதுக்குத் தான்கொடுத்தார் வையகத்தோருங் காண

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi