அகிலத்திரட்டு அம்மானை 15181 - 15210 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 15181 - 15210 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஈரே ழுலகும் இவர்செய்த நற்றவம்போல்
ஆரேதுஞ் செய்ய அடங்கா திவர்தவந்தான்
பிறவிநா சக்கலியன் பொல்லாத வையகத்தில்
திறவி தனிலிருந்து செய்துதவ மேற்றுவரோ
கண்டாற் பவஞ்சூடும் கலியனுட வையகத்தில்
தண்டரள மானதவம் தாக்கிநிறை வேற்றுவரோ
கலிதொடரு முன்னே கனகதுவா பரயுகத்தில்
சலியாமல் வாழ்ந்த தர்மி முதல்தவத்தோர்
பதறி நடுங்கிப் படாதினிமே லென்றுசொல்லிக்
குதறி மலைந்து கொடுவான மாமுகடும்
கெடுவுங் குகையும் கீழுமேலும் நுழைந்து
முடுகி முன்னோடி நுழைந்தார் மிகப்பதறி
அப்படியே நல்ல அறிவோர் பதறிமிகத்
இப்போஒழித்து இருக்கிறார் ஓதிக்கொண்டும்
தப்பிவர யிவரும் சடையாம லவ்வுக்ததில்
முப்பிறவி யுந்தியிலும் உதித்துக் குதித்தவராய்
அவ்வுகத்துக் குள்ளே ஆண்டுமூ வாறுவரை
செவ்வுமகா ஞானத் திறவி வெளிநாடிப்
பவமணுகா வண்ணம் பாரத் தவம்புரிந்து
சிவமதுவைக் கண்டு செயல்பெற்று அவ்வுகத்தில்
மாது கிளையோடும் மக்கள்பல சொத்தோடும்
சீது மனையோடும் சிறந்தபல ஞாயமொடும்
இருந்துமிக வாழ்ந்து எள்பாவஞ் சூடமால்
திருந்து வைகுண்ட சிவவீடு காண்பவரார்
பெரிது பெரிதெனவே பெரிய முனிவோரும்
அரிது அரிதெனவே அகமகிழ்ந்து கொண்டாடிக்
கொண்டாடிநாதந் குருவேசரணமென
வண்ணக்கயிலையில் வானவரும் போற்றிநிற்கப்
பூமிதனில் மக்கள் பெரியகுலச் சான்றோர்கள்
சாமியுட தேவி சுற்றமட மாதர்களும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi