அகிலத்திரட்டு அம்மானை 15661 - 15690 of 16200 அடிகள்
சாற்றக் கூடாது தானிதுவே சொன்னவுடன்
வாத்தி யுன்னோடு வந்துவளங் கூறிடவே
பார்த்தென்னை நீயும் பற்கடித்துச் சொல்லெனவே
இறுக்கி நெருக்க இசையாமல் நான்மாறி
உறுக்கிப் பெரியோன் உற்ற அரி யோன்பேரைச்
சொல்லவே நீயும் சொன்னஅரி யெங்கேஎன்றாய்
வல்லப் பொருளான மாய அரியோனும்
எங்கெங் குமாகி எவ்வுயிர்க்கும் தானாகி
அங்கெங் குமாகி அளவுக் களவாகி
நிரந்தரமா யெங்கும் நிறைந்த சொரூபமதாய்ப்
பரப்பிரம்மமாய் நிற்பார் பாரஅரி யென்றேனே
கோணி நீவாடி குருவென்ற உன்னரிதான்
தூணிலு முண்டோசொல் என்றே எனைப்பார்த்துக்
கேட்கநா னுண்டெனவே கிறுங்காமல் சொல்லிடவே
வாடகணையால் நீயும் வாயில்நடை தன்னில்நிற்கும்
தூணைமிக வெட்டச் சிங்கமாய் நான்குதித்து
வீண்கொண்டப் பாவுயுனை வெய்யோ னடைவதிலே
இடைநடையில் வைத்து என்ற னொருநகத்தால்
குடல்நெளியக் கீறிக் கொன்றேனா னுன்னையுமே
உயிர்நெகிழு முன்னே உன்னுடைய கண்முன்னின்று
செய்த யுத்தத் திறன்சொன்ன அப்போது
உன்னாலே யென்னை உயிரழிக்க ஏலாது
முன்னா லுன்னகத்தில் உற்றமலைப் பத்ததனைச்
சேர்த்துப் பதித்துச் செய்ய நகமாக்கிக்
கீற்றுநீ செய்தாய் கெறுவிதமா யல்லாது
ஏலாது உன்னாலென்று இயம்பவுட னான்மாறி
மேலாகப் பின்னும் விளம்பினதை நீகேளு
பத்துமலையைப் பாரநகமாய்ப் பதித்து
இத்தலத்தில் இப்போ இறக்க செய்தாயல்லாது
உன்னாலெனை மாய்க்க உற்றவகையில்லையென்று
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 15661 - 15690 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi