அகிலத்திரட்டு அம்மானை 15211 - 15240 of 16200 அடிகள்
அன்பான தொண்டர்களும் அயர்ந்து முகங்கோடி
வம்பான பேர்கள் வசையாய் மிகநகைக்க
கைகொண்டுதொட்டுக் கன்னத்தில்முத்திமுத்தி
வைகுண்ட மேக வழிகொண்டார் நம்மளையா
சான்றோர் கோவில் அமைத்தல்
என்று புலம்பி எல்லோருந் தாந்தேறி
நன்றுகளின்று நவில்வார் எல்லோரும்
முன்று மொழிந்த மொழிப்படியே நம்மளையா
இன்னம்நமை எடுக்கவர ஏகினார்வைகுண்டமென்று
மடமடெனச் சான்றோர் மலைபிடுங்கி கொண்டுவந்து
திடமான சங்குமண் சேர்ந்துமிகக் குழைத்து
பொன்மேனிக்கூட்டை பொதிந்துமணிவைத்து கோவில்
தென்மேனிச்சான்றோர் திருநாள்நடத்திவந்தார்
நடந்தார் தானல்லால் ஞாயம்வே றில்லையென்று
மாதத் திருநாளும் வாரமற வாதபடி
நாதன் தனக்கு நாமள்செய் வோமெனவே
கோவிலது வைத்துக் கூண்டதிரு நாள்நடத்திச்
சேவைசெய்து மக்கள் தினஞ்சூழ போற்றிநிற்க
நாதனுட தேவி நாயகிமா ரெல்லோரும்
சீதமண வாளருட சீர்பாத முண்டெனவே
துயரமதாய் வாடி சிவனே செயலெனவே
இயல்புதரு வீரெனவே இருந்தார் தவமுறைபோல்
நண்பரெல்லாம் வாடி நாரணா போற்றியென்று
அன்பர் முறைபோல் அகமகிழ்ந்து தாமிருந்தார்
இப்படியே அன்பர் ஏந்திழைமா ரெல்லோரும்
முப்படியே சொன்ன முறையெனவே யிங்கிருக்க
அப்போ கயிலைதனில் ஆனகுரு நாரணரும்
மைப்போ லினிய மகனைமிக முன்னிறுத்திக்
கூண்ட மணியே கோகுலமே கற்பகமே
ஆண்ட மணியே அருள்ஞானக் கண்மணியே
ஆதிசிவமணியே ஆதிநாராயண மணியே
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 15211 - 15240 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi