அகிலத்திரட்டு அம்மானை 15031 - 15060 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 15031 - 15060 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

இன்ன மொருபெண் ஏற்ற மடந்தையரை
நன்னகரி மெய்க்க நாமணங்கள் செய்யவென்று
கேட்டுப் பரிசமிட்டுக் கிளர்ந்த முகூர்த்தமிட்டு
நாட்டு நருளறிய நாரிமின்னாள் தானிருக்கும்
ஊரிலவர் சென்று உற்றமங்க ளம்புரிந்து
பாரி லகமகிழப் பதியில்வந்து தானிருந்தார்
பதிதனிலே வந்து பாவித் தகமகிழ்ந்து
விதியால் பெரிய விருதுக் கொடிகள்கட்டிச்
சொத்தாஸ்தி வஸ்து தொகையெண்ண மில்லாமல்
வத்தாஸ்தி பேரில் மனது மிகநாடி
நிலங்கரைகள் சுற்றி நிறைபயிர்கள் தன்னிலைவாய்
தலம்புகழும் நாதன் தனதுள் ளகமகிழ்ந்து
பெண்ணார் அவரவர்க்கு பொசிக்கும்பல வஸ்துகளும்
கண்ணான மாயன் கையார வேகொடுத்து
கடலதைவிட்டு கலியுகத்தை நான்அழித்து
மடமடென துவாரகையில் மக்களை எல்லாரையும் வைத்து
துவரயம்பதி இருந்து சொல்லொன்றால் ஆள்வேன்என்று
கவராயிரங்கோடி கருத்தெல்லாம் உள்ளடக்கி
நடத்திப் பெண்ணாரை நல்ல வொருங்காக
இடத்தி லிருத்தி இகனை புரிகையிலே
எம்பெருமாள் நாட்டு இகனை நிறைவேற்றிப்
பொன்பதியில் நாளேழும் புரிந்து திருநாளும்
நடத்தித் திருமால் நாட்டுக்கணக் கும்பார்த்துத்
தடத்தின் வழியாய்த் தானிருந் தாராய்ந்து
வந்தநாள் வந்து வையகத்துச் சோதனைகள்
இந்தநாள் வரைக்கும் இருந்துநாம் பார்த்ததிலே
மிச்சமெந்தச் சாதியென்று மேலோர் மிகஅறிந்து
அச்சமில்லாச் சாதி ஆதிச்சான் றோர்களையும்
விலைபோட்டு ஆளடிமை மேவிக்கொள்ள வேணுமென்று
மலையாம லெம்பெருமாள் மனதிலுற்றுச் சான்றோரை

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi