அகிலத்திரட்டு அம்மானை 15901 - 15930 of 16200 அடிகள்
வாறானநாரணர்தாம் வாக்குரைத்தபடியே
நேராக வாழுமென்று நெடியோன் விடைகொடுத்தார்
வருணனுக்கும் நல்ல வாக்கு மிகக்கொடுத்துத்
தருண மதுபார்த்து சாற்றியிரு என்றுரைத்தார்
வாயு வதற்கு மரைபோல் வழங்கெனவே
வீசு புகழ்நாதன் விடைகொடுத்தா ரம்மானை
நீதமது மூன்றும் நிலையாக நில்லுமென்று
சீதக் குருநாதன் சொன்னா ரதுகளுக்கு
மானுவ தர்ம வரம்பு தவறாமல்
நானுப தேசம் நவின்றதுபோல் நில்லுமென்றார்
பூமகள் வாணி பொருந்திக் கலைபுரிந்து
சீர்முக தர்மச் சீமையி லும்வாழ்ந்து
மகிழ்ந்திரு மென்று மாய னருள்புரிந்தார்
குவிந்து மலர்மகளும் கொண்டாடிக் கொண்டிருந்தாள்
கங்கை முதலாய்க் கனகரத்தி னாதிகளும்
சங்கையுட னீங்கள் தன்னால் துலங்கிமிக
ஏழைபங்காளர் ஈதலிரக்கமுடன்
வாழுவீ ரென்று வரமும் மிகக்கொடுத்து
என்னென்ன பாக்கியங்கள் எல்லா மிகத்தழைத்துப்
பொன்னம் பலம்போல் பொருந்திமிக வாழுமென்று
நல்ல வகையெவர்க்கும் நாடி மிகக்கொடுத்தார்
வல்ல புவிக்கு வாழ்வுவர முங்கொடுத்து
நல்ல வைகுண்டர் நாரா யணர்மகற்கு
வல்ல மகற்கு வாய்த்தமுடி யுஞ்சூடிச்
செல்ல கலியாணம் செய்யவே ணுமெனவே
வைகுண்ட ரான வாய்த்தகுரு நாதனுக்கு
மெய்குண்ட ரான விமலக்குரு நாதனுக்கு
நாதக் குருவான நாரா யணமணிக்கு
சீதமங்கை மார்கள் தேவிதெய்ட கன்னியரை
கன்னியரை நன்றாய்க் கலியாண மும்புரிந்து
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 15901 - 15930 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi