அகிலத்திரட்டு அம்மானை 14101 - 14130 of 16200 அடிகள்
தெய்வ மடவாரைத் திருமணங்கள் செய்தாரென்று
வையமது சொன்ன வளமுரைத்தீ ரென்போத்தி
மாதரையும் பார்க்க மனவிருப்ப மாயிருக்கு
ஆதரவாய்ப் போத்தி அதுவரையும் என்னையும்நீர்
கூட்டிக்கொண்டு போவீர் கிழவனா னபோத்தி
பூட்டியுந் தன்பிறகே பிள்ளைபோ லேவருவேன்
செய்தியென்ன வென்று தேவி யுருக்கமுடன்
செய்தி மிகவடைந்த தாதனோ டேயுரைத்தாள்
அப்பொழுது லாடகுரு அவரேது சொல்லலுற்றார்
இப்படியே சொன்னதற்கு யான்கூட்டிப் போயிடுவேன்
ஓடி நடக்க ஓட்டாது தள்ளாட்டம்
கூடி நடக்கக் குறுக்குப் பெலக்காது
பேசி நடக்கப் பிசகுமம்மா என்னாக்கு
வீசி நடக்க விழிக்குக்கொஞ் சமறைவு
கக்க லிருமல் கால்பெலக்க வொட்டாது
சிக்கெனவே நடந்தால் செருக்கிரும லீளைவரும்
இத்தனை துன்பம் இருக்குங் கிழவனுடன்
சிற்றிடையீர் நல்ல சிறுபிரா யம்நடந்தால்
ஒக்குமோ பேத்தி உன்னடையு மென்னடையும்
பக்குவமோ நான்தான் பாதை நடப்பதற்கு
நானடப்பேன் காதவழி நாலுநாள் தங்கலென
நீயென்னோ டேநடந்தால் நிகராமோ பேத்தியென்றார்
அப்போது நல்ல ஆயிழையு மேதுரைப்பாள்
நற்போடு வொத்த நம்முடைய பேராநீர்
வேறாட்கள் கூடவெளியேறப் போகாது
வீறாகப் போத்தி மெல்லநடை யாகிடினும்
உம்மோடே நடக்க உள்ளாசை யாயிருக்கு
எம்மாத்திரம் நாட்கள் எவ்வளவு சென்றாலும்
பைய இருந்திருந்து பாதை மிகநடந்து
நெய்யதியக் கன்னி நேரிழைமா ரேழ்வரையும்
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 14101 - 14130 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi