அகிலத்திரட்டு அம்மானை 9451 - 9480 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 9451 - 9480 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சோதிமணியே சுவாமி யெனத்தொழுதார்
உடனே மகன்தனையும் உவந்துமுகத் தோடணைத்துக்
கடலின் சிறப்பைக் கண்டாயோ என்னுசொல்லி
மகனே வுனைவிட்டு மறுவூரு வாழ்வேனோ
நகமுஞ் சதையும்போல் நான்வருவே னுன்கூட
எத்தனை கோடி இயல்தர்மஞ் செய்துவுன்னைப்
பெற்றெடுத்தே னுன்கூட பிறகே வருவேனப்பா
நீயொருவ னெனக்கு நிலையென்று காணுமுன்னே
தாயில்லாப் பிள்ளையைப்போல் தட்டழிந்தே னென்மகனே
மகனே வுனைக்கண்டு மனச்சடவெல் லாந்தீர்ந்தேன்
சுகமேபோய் வாவெனவே சொல்லி யனுப்புவேனோ
உன்கூட நானும் ஓடி வருவேனப்பா
என்கூட வுன்தாயும் ஏகி வருவாள்காண்
என்று தாய்தகப்பன் இவர்கள் வழிகொள்ளவே
கண்டு வைகுண்டர் கனமாய் மனமகிழ்ந்து
நீங்கள் வருவதுதான் எனக்குவெகு சந்தோசம்
தாங்கி வருவேன் தமியேனுங்கள் பாதமதை
அப்போது நாரா யணர்மகனே யாவிமிக
இப்போ தென்மகனே இயம்புகிற புத்தியைக்கேள்
சீமை யதுகாணச் செல்லோங்கா ணுன்கூட
வாமை மகனே வருவோமுன் கண்காண
மகனே நீநடக்க வைகுண்டம்வை குண்டமென
உகமீ ரேழுங்காண உரைத்துவிடு யாமமது
முன்னடந்து யாமம் மொழிந்துநட என்மகனே
பின்னடந்து நானும் யாமம் பிசகாமல்
நடத்திவைப் பேன்மகனே நல்லமணி மரகதமே
அடத்திவிட்ட யாமமது அனுப்போல் பிசகாமல்
காட்டுவிப்பேன் மகனே கண்ணேநீ முன்னடநீ
தாட்டிமையா யுன்வாக்கால் தானுரைத்த யாமமெல்லாம்
நடத்திவைக்க வாறேன் நன்மகனே வுன்பிறகே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi