அகிலத்திரட்டு அம்மானை 7621 - 7650 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 7621 - 7650 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பரப்போரைக் கைசேர்த்துப் பணிவதுவே நன்றாகும்
என்பேரால் முத்திரிகள் இட்டோரே நன்றாகும்
அன்போராய் வாழ்ந்தாலும் அறிவுநினை வொன்றானால்
நாம்வந்தோ மென்ற நாமமது கேட்டவுடன்
தாம்வந்து வேடமிட்டோர் சாதியது நன்றாகும்
அல்லாமற் கேளு அரிய முனியேநீ
எல்லா அமைப்பும் ஏலமே விட்டகுறை
எச்சாதிக் காச்சோ அச்சாதி நன்றாகும்
அச்சாதிநன்றாகும் அவ்வினமும் நன்றாகும்
எவர்க்கு மிகஈந்து இருப்போரே நன்றாகும்
அவர்க்குதவி செய்வோர் அவ்வினமும் நன்றாகும்
தாழ்மையாய் வாழ்ந்த சாதியது நன்றாகும்
ஏழ்மையாய் வருவோம் இரப்பன் பரப்பனென
இரப்பனைக் கைகொண்டோர் எனையேற்றார் மாமுனியே
பரப்பனைக் கைகொண்டோர் பரமேற்றார் மாமுனியே
சினமு மறந்து செடமுழிக்கும் பேர்மனுக்கள்
நினைவுக்குள்ளே நாம் நிற்போங்காண் மாமுனியே
இனத்தோடே வொத்து இருந்துமிக வாழ்ந்தாலும்
சொன்ன நினைவதுக்குள் துயிலாமல் வாழ்வோங்காண்
மாசுக் கலியை மனதூடா டாதேயறுத்து
வாசு நினைவில் வந்துநிற்போம் மாமுனியே
பின்னுமொன்று கேளு ஒருவர்க்கோர் வாரமுமாய்
முன்னுகத்தில் கேள் ஒருவர்க்கோர்வாரமுமாய்
நின்றோ முனியேயினி நீசக் கலியறுக்கச்
சென்றோமே யானால் செய்யுந் தொழில்கேளு
காலுக்குள் ளேதிரியாம் கையதுக்குள் ளேதிரியாம்
மேலுக்குள் ளேதிரியாம் விழியதுக்குள் ளேதிரியாம்
கண்டெடுத்தார் வாழ்வார் காணாதார் வீணாவார்
பண்டைப் பழமொழிபோல் பார்மீதி லாட்டுவிப்பேன்
கண்டெடுத்துக் கொண்டோர் கரையேறு வாரெனவும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi