அகிலத்திரட்டு அம்மானை 7651 - 7680 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 7651 - 7680 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தொண்டனெனக் கண்டு சொன்னேனா னுன்னோடு
தாய்தமர்க ளென்றும் தனது கிளைகளென்றும்
வாயுரமாய்ச் சொல்லும் வம்பரென்றும் பார்ப்பதில்லை
அன்பாகி வந்தவரை அலைச்சல்செய் தேற்பதுண்டு
வம்பான மாற்றானை வளர்த்தே யறுப்பதுண்டு
எட்டியு மெட்டாத எழைக் குணம்போலும்
கட்டியுங் கட்டாத கடிய சொரூபமதும்
வேளைக்கு வேளை விதக்கோல முமணிந்து
நாளுக்கு நாளாய் நடக்கு மதிசயமாய்
இரப்ப வடிவாய் இருந்து கலிதனையும்
பரப்பிரியமாய் நின்று பக்திசோதித்தேநாம்
எங்குமிருந்து எரிப்போங் கலிதனையும்
சங்கி லிரந்து தான்வளர்ப்பே னன்போரை
என்றுரைக்க நாதன் எடுத்துமுனி யேதுரைப்பான்
மன்று தனையளந்த மாயத் திருமாலே
இந்த விதமாய் எழுந்தருளி வந்திருப்ப(து)
எந்தச் சொரூபம் எடுத்தணிவீ ரெம்பொருமாள்
கேட்டான் முனியும் கீர்த்தியுள்ள ஈசுரரே
நாட்டான மாமுனிக்கு நானுரைத்தது கேளும்
இகாபரத்தை நானினைத்து ஏழுபிள்ளை ஈன்றெடுத்து
மகாபரனார் செயலால் மக்களுக்குச் சொத்தீய
நானுப தேசித்து நாட்டில் மிகவிருத்தி
மானுவஞ் சோதிக்க மகற்கு அருள்கொடுத்து
மாசுக் கலியறுத்து மக்களொரு மித்தவுடன்
பாசு பதங்கொடுத்துப் பாலன்கை யால்விளக்கிக்
கூப்பிடுத லொன்றில் குவலயத்தைத் தான்கிறக்கிச்
சாப்பிடுவே னஞ்சைத் தன்பாலை யாளவைப்பேன்
என்று கலைமுனிக்கு இயம்பிவந்தே னீசுரரே
அன்று மொழிந்ததுக்கு அமைத்ததுகா ணிம்மகவு
சந்தோச மாச்சுதுகாண் சங்கரரே நீருமிப்போ

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi