அகிலத்திரட்டு அம்மானை 7591 - 7620 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 7591 - 7620 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கனவிலு மடங்கா கருவிலு மடங்கா உருவிலு மடங்கா உருதையிலடங்கா
ஒன்றிலு மடங்காத உனைவந் தடியாருன தருகினி லடங்கிட
அருளுரைத் திடுவென அருள்முனி பதத்தடிமிசை விழுந்தான்

விருத்தம்


உகத்திலு மடங்கா ஓதிலு மடங்கா உணர்விலு மடங்கா
உற்பனத் திலுமடங்கா தவத்திலு மடங்கா தழுவிலு மடங்கா
தனத்திலு மடங்கா தயவிலு மடங்கா அகத்திலு மடங்கா
புறத்திலு மடங்கா அசத்திலு மடங்கா புசத்திலு மடங்கா
மனத்தகத் தடக்கியுன் பதத்தடி பணிந்திட
வகுத்துரை யருளென பதத்தடிமிசை விழுந்தான்

நடை


ஓரெழுத்து மீரெழுத்தும் உற்றபர மூன்றெழுத்தும்
ஆறெழுத்து மஞ்செழுத்தும் ஆனா அரியெழுத்தும்
ஏதெழுத்திலு மடங்காது இருந்துபகை முடிப்பேனென
ஓதினீரே அய்யா உலகளந்த பெம்மானே
எட்டாப் பொருளே எங்கும் நிறைந்தோனே
கட்டாக் கலியைக் கருவறுக்க வந்தீரால்
நாங்களுமைக் கண்டு நலம்பெறுவ தெப்படித்தான்
தாங்கள் மனதிரங்கித் தான்சொல்ல வேணுமென்றான்
அப்போ முனிக்கு அருளினது நீர்கேளும்
இப்போது மாமுனியே இன்றுநீ கேட்டதுதான்
ஒருவ ரறியாத உபதேசங் கண்டாயே
கருதி வருந்தினதால் கட்டுரைப்பேன் கேட்டிடுநீ
எனக்கா கும்பேர்கள் இனங்கேளு மாமுனியே
புனக்கார மில்லை பூசை முறையுமில்லை
கோவில்கள் வைத்துக் குருபூசை செய்யார்கள்
பூவதுகள் போட்டுப் போற்றியே நில்லார்கள்
ஆடு கிடாய்கோழி அறுத்துபலி யிடார்கள்
மாடு மண்ணுருவை வணங்கித் திரியார்கள்
என்பேரு சொல்லி யாரொருவர் வந்தாலும்
அன்போ டவரை ஆதரிக்கும் பேராகும்
இரப்போர் முகம்பார்த்து ஈவதுவே நன்றாகும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi