அகிலத்திரட்டு அம்மானை 7561 - 7590 of 16200 அடிகள்
செறிந்தோர்கள் வாழ்வார் சேராதார் போய்மாழ்வார்
சாத்திரத்தி லுந்தோன்றேன் சதுர்மறையைத் தாண்டிநிற்பேன்
சேத்திரத்தி லுமடங்கேன் செய்தவத்தி லுமடங்கேன்
அன்பிலு மடங்கேன் அறத்திலு மேயடங்கேன்
வம்பிலு மடங்கேன் வணங்கிடி லுமடங்கேன்
கும்பிடி லுமடங்கேன் குவித்திடி லுமடங்கேன்
நம்பிடி லுமடங்கேன் ஞானத்தி லுமடங்கேன்
யோகக் கிரியை உறுசரிதை யிலடங்கேன்
விற்பனத்தி லடங்கேன் வினோத மதிலடங்கேன்
சொற்பனத்தி லடங்கேன் தெரிசனத் திலடங்கேன்
கனாவி லடங்கேன் கைகாட்ட லிலடங்கேன்
அனாவி லடங்கேன் அச்சரத்திலு மடங்கேன்
புத்தியிலும் மடங்கேன் பொறியதிலுமடங்கேன்
இத்தனையிலு மடங்காது இருந்து பகைமுடிப்பேன்
என்றுநான் சொல்ல ஏற்றகலைக் கோட்டுமுனி
மன்றுதனில் வீழ்ந்து மறுகியழு தேபுலம்பி
விருத்தம்
மண்ணிலு மடங்கா மனத்திலு மடங்கா மறையிலு மடங்கா
பலவசத்திலு மடங்கா கண்ணிலு மடங்கா கருத்திலு மடங்கா
கவியிலு மடங்கா பலவிதசெபிப் பிலுமடங்கா
எண்ணிலு மடங்கா இகத்திலு மடங்கா இறையினி லடங்கா
இரங்கிலு மடங்கா ஒண்ணிலு மடங்காத உனைவந் தடைந்திட
உரைத்திட திடமருளென பதத்தடிமிசை விழுந்தான்
விருத்தம்
மறையினி லடங்கா இறையினி லடங்கா வணங்கிலு மடங்கா
பலவகையிலு மடங்கா துறையினி லடங்கா தொல்புவியி லடங்கா
சுருதியி லடங்காய சுகயினிலடங்கா உறவிலு மடங்கா
ஒளியிலு மடங்கா உகத்திலு மடங்கா ஒருவிதத்திலு மடங்கா
புறத்திலு மடங்கா அகத்திலு மடங்கா புகழ்ந்துனை யடைக்கிட
வகுத்துரையென பதத்தடி மிசைவிழுந்தான்
விருத்தம்
சரிகையி லடங்கா கிரியையி லடங்கா சயோகத்தி லடங்கா
ஞானத்தி லடங்கா கருத்தினி லடங்கா கலைக்கியானத் திலடங்கா
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 7561 - 7590 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi