அகிலத்திரட்டு அம்மானை 7531 - 7560 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 7531 - 7560 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கெண்டையக்கண் ணீசுரரே கேட்டீரோ யென்றனெண்ணம்

திருமால் கலைமுனிக்கு அருளல்

பஞ்சவர்க்கு அஞ்சல்செய்து பார்மீதில் நானிருக்க
வஞ்சகநீ சக்கலியன் வந்ததுகண் டேபதறி
நடுநடுங்கி நானோட நல்லகலைக் கோட்டுமுனி
பொடுபொடென வந்தான் போற வழிதனிலே
ஏன்காணும் மாயவரே எய்த்திளைத் தோடுவதேன்
கண்காணாப் போறேனென கலைக்கோட்டு டனுரைத்தேன்
என்ன விதத்தாலே என்றே யவனிசைய
சொன்னதுறு கலியன் சூட்சியினா லென்றவுடன்
அப்போ முனியும் அவனேது சொல்லலுற்றான்
இப்போநீ ரோடுகிறீர் இவனை யழிப்பதற்கு
எப்போ வருவீர் இசையுமென்றான் மாமுனிவன்
அப்போ முனியோடு அருளினது நீர்கேளும்
மாமுனியே நீகேளு வஞ்சகநீ சக்கலியை
நாமுன்னின்று கொல்ல ஞாயமில்லை கேட்டிடுநீ
கலியனுட கண்ணு கண்டால் பவஞ்சூடும்
திலிய அவனுயிரைச் செயிக்கயெவ ரால்முடியும்
முன்னின்று கொல்ல மூவரா லுமரிது
பின்னின் றவனவனால் பேசாதே மாழவைப்பேன்
வல்லமையுங் காட்டேன் மாநீசன் கண்ணின்முன்னே
நில்லாமல் நின்று நீசன்தனை யழிப்பேன்
அற்புதமும் செய்யேன் அந்நீசன் தானறிய
உற்பனமுங் கொடேன் ஒன்றறியா நின்றிடுவேன்
வந்தெனச் சொல்வார் வரவில்லை யென்றிடுவார்
என்றன்பே ரோகாணும் யாரோஎனச் சொல்வார்
இதோவந்தா னென்பார் இவனில்லை யென்றிடுவார்
அதோவந்தா னென்பார் அவனில்லை யென்றிடுவார்
இப்படியே சூட்சமொன்று எடுப்போம்நாம் மாமுனியே
எப்படியு முள்ளறிவோர் எனையறிவார் மாமுனியே
அறிந்தோ ரறிவார் அறியாதார் நீறாவார்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi