அகிலத்திரட்டு அம்மானை 7411 - 7440 of 16200 அடிகள்
அல்லாம லுன்றனக்கு ஆதிவரை யெந்நாளும்
நல்லாகத் தொண்டுபண்ணி நவ்வியிருக்கு மனுவில்
படையுமையா யென்றன் பிதாவே யெனப்பணிந்தான்
குடையொன் றாற்பெரிய குருவு மகிழ்ந்துரைப்பார்
நல்லதுகாண் தேவாநீ நம்மக்கள் ஏழ்பேரில்
வெல்லமர் கோன்வாழும் வெற்றிதெய்வ லோகவித்தாய்
அவ்வழியி லம்மனுவில் ஆனசான் றோர்குலத்தில்
மெய்வழியி லங்கே மிகப்பிறக்கப் போநீயென்றார்
நல்லதுதா னென்று நவிலுவான் தேவனுமே
வல்லவரே மூவருக்கும் மைத்துனராய் நிற்போரே
என்னைப் பிறவி இப்போது செய்யுமென்று
வன்னத் தேவாதி வணங்கிநின்றான் மாயவரை
ஆத்ம ஜெயம்
அப்பொழுது அய்யா நாராயணர் மகிழ்ந்து
முப்பொழுது வுள்ள முறைமையது கூறலுற்றார்
ஆறுதரம் நம்மை அகம்வைத்துக் கொண்டசடம்
பேதுபெற்ற தில்லையே பேறுநா மீந்திலையே
அச்சடல மம்மலையில் அருந்தவசு பண்ணினதே
இச்சடல மீடேற இந்தநாள் வந்துதென்று
நற்சடலமானதை நருக்கென்றளித்து விட்டு
தேவன் சடலமதைத் திக்கென் றழித்துவிட்டு
மூவர் நடுவருட முச்சடலக் கூடதையும்
தேவருக்கு அதிபதியாம் திருமால்ஆனவரும்
வரவழைத்து வாருமென்று மறையோரைத் தானேவி
விரைவாக வாருமென்று விடைகொடுத்தா ரெல்லோரும்
நடந்து மறையோர் நல்ல மலைபார்த்துச்
சடம் வீற்றிருந்த தங்கமலை மீதில்வந்தார்
மலைமீதில் வந்து மலைப்புதுமை தான் பார்த்து
அலைமீதில் வாழ்துவரா ஆனபதி தன்னுடைய
வடவாசல் நேரே வாழு மலையிதுதான்
தடவரை யிம்மலையில் தானிருக்கும் நதிகள்
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 7411 - 7440 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi