அகிலத்திரட்டு அம்மானை 7441 - 7470 of 16200 அடிகள்
தங்கக்கிணர் வங்கக்கிணர் தாம்பிரக் கிணறுடனே
சங்கமகி ழிம்மலையின் தடாகமிது நன்றெனவே
கரைகாணாத் தேவர் காட்சியிடு மிம்மலைதான்
விரைவான மாமுனிவர் வீற்றிருக்கு மிம்மலைதான்
மரித்தோரைத் தானெழுப்பும் வாய்த்தசஞ்சீ விவளரும்
பரித்தான மிம்மலையின் பகுத்துரைக்கக் கூடாது
என்றுசொல்லித் தேவர் ஏற்றமலைக் குள்ளேகி
நன்றுநன் றென்று நாடியவர் பார்க்குகையில்
கண்டாரே காயாம்பூ கண்ணர்முக் கூடதையும்
கொண்டாடிக் கூடதையும் குளிர்ந்தரத மீதேற்றி
நடந்தார் கயிலை நாதர்திருக் கூட்டமதில்
வடந்தார மார்பன் வாய்த்த அரிநாரணரும்
பார்த்துச் சடலமதைப் பதிந்தமுகத் தோடணைத்துத்
தேற்றி உயிர்க்கொடுத்துச் செப்புவார் கூடுடனே
எடுத்த பிறப்புக்கு எல்லாமெனைச் சுமந்து
அடுத்து மூவுலகும் அங்கங்கே கொண்டேகிப்
பூமி கடலும் பொருப்புப்பூ லோகமெல்லாம்
நேமித் தெனைச்சுமந்து நேட்டமுடன் திரிந்தாய்
நீசெய்த நன்றி நினக்குரைக்கக் கூடாது
நானுனக்குச் செய்யும் நன்றி மிகக்கேளு
இத்தனை நாளும் எனைச்சுமந்து பாடுபட்டாய்
புத்திரனைப் போல பெரிய சம்பூர்ணனை
சுமந்துவருவாய் கடலில் சொர்க்கங் கொடுக்கவேணும்
அமர்ந்த முகூர்த்தமதில் அங்குன்னை நானெடுத்து
உன்தனக்குப் புத்தி உபதேசங் களுரைத்து
எந்தனோடு எல்லாரும் இன்பமாய் தவசிருந்து
சிவநாராயணரை சிறுமதலை குண்டராக்கி
நவசோதனைக்கு நாட்டுக் கனுப்பி வைத்து
புத்திரனாய் நீயெனக்குப் பெரிய தெய்வவுயிரில்
பிறந்து புவிமீதில் பின்னுஞ்சில நாள்க்கழித்து
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 7441 - 7470 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi