அகிலத்திரட்டு அம்மானை 7381 - 7410 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 7381 - 7410 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கேணிக்குள் ளேயிறப்பார் கீறிக்கொண் டேசாவார்
வயிர முழுங்கி மாள்வார் சிலபேர்கள்
துயரம் பொறுக்காமல் தோயமதி லேவிழுவார்
ஈக்கள் பெருகும் எறும்பு மிகப்பெருகும்
காய்கள் பெருகும் கஞ்சா அபின்பெருகும்
சன்னாசி நிஷ்டை தவறி யலைவார்கள்
ஒன்னாமது சாதி உலைமெழுகு போலலைவார்
கட்டழிந்து பெண்கள் கற்பு மிகத்தவறும்
சட்ட மழியும் சந்தியம்பல மிடியும்
கூட்டங் குலையும் குடும்பம் பகையாகும்
நாட்டை யரசாங்கம் நாலுரண்டு மூன்றாகும்
கோட்டை யழியும் குச்சிக்கட் டைமதிலாம்
நாட்டையறுக்கும் நாதனுட சக்கரந்தான்
சீவசெந் தெல்லாம் தீனில்லாத் தட்டழியும்
சூவை பெருக்கும் சூறா வளிமீறும்
அக்கினியால் தண்ணீரால் அநேக சீமையழியும்
முக்கியமாய் லோகமதில் வாந்தி மிகமீறும்
இப்படித்தா னல்லாமல் இன்னு மநேகவளம்
செப்பத் தொலையாது செப்புவேன் பின்னுனக்கு
நீகேட் டதற்கு நிலையாக இத்தனையும்
நான்தேட் டமாக நாடியுன் னோடுரைத்தேன்
உன்பேரால் நானும் உள்ளாசை கொண்டிருந்துன்
என்பேரால் நீயும் என்சொர்க்கம் சேரனுமே
சொன்னே னுனக்குச் சொல்லுவே னின்னமுமே
என்ன இனிப்பிறக்க ஏதுனக்குச் சங்கடங்கள்
என்றுரைக்க நாதன் இசைந்ததே வனுரைப்பான்
அய்யாவே யென்னுடைய ஆதித் திருவுளமே
பொய்யா னகலியில் போய்ப்பிறக்கச் சொன்னீரே
சாதி பதினெண்ணாய்த் தான்பிரித்தா னேநீசன்
ஆதித்தா திதனிலே அமையுமையா என்கோவே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi