அகிலத்திரட்டு அம்மானை 7351 - 7380 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 7351 - 7380 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நவ்வா துலுக்கு நாட்டில் கலசல்வரும்
சிவ்வா லயங்கள் தேய்ந்து சுவரிடியும்
கிணறு பாழாகும் கீழூற்றுப் பொய்யாகும்
இணறு பெருத்து ஏங்குவாரே மனுக்கள்
மனுக்கள் தங்களுக்கு மாகலச லுண்டாகும்
முனக்கத்துரோகி உலகில் மிகவுண்டாகும்
மாமோக ஆசையினால் மாசண்டை யாகிவரும்
காமோக வெறியால் கனபழிக ளுண்டாகும்
மாதாவைப் பிள்ளை வைப்பு நினைத்துநிற்கும்
தாதாவை வேலை சந்ததிகள் கொண்டிடுவார்
மாடாடு வயிற்றில் மனிதர்போல் தான்பிறக்கும்
கோடா னதுபெருத்துக் கொல்வார் சிலபேரை
காணிக்கை வேண்டல் கைக்கூலி தான்மீறும்
மாணிக்கத் தங்கம் வையிர மிகமறையும்
நீணிலத்தில் பேய்கள் நிரந்துமிகக் கோட்டிசெய்யும்
மாநிலத்தில் வேளாண்மை மழையில் மிகக்கேடுவரும்
பேதையர்கள் பிள்ளை பிறக்கு மதிசயம்போல்
கோதையர்கள் கொங்கை கூடாம லேவாழ்வார்
கூடப் பிறப்பைக் கொடும்பகைபோ லெண்ணிடுவார்
ஊடப்பிறப்பை உள்நினைப்பார் வைப்பாக
வான முறுமும் மழைகீழ்ச் சொரியாது
தான மழியும் சாஸ்திரங்கள் பொய்யாகும்
ஈனருக்குக் காலம் ரெம்பரெம்ப வுண்டாகும்
வீணர் பெருப்பார் வீடதனைக் கெடுப்பார்
தாணருட வேதம் தலையழிய விட்டிடுவார்
பொய்வேதம் பூமிதனில் பெருத்துமிக வுண்டாகும்
மெய்வேதந் தன்னை விரும்பா திகழ்ச்சிசெய்வார்
கள்ளர் பெருப்பார் கறியுப்பு மேமலியும்
கொள்ளையாய்ச் சம்பை கோடாமுக் கோடியுமாய்
நாணி யிறப்பார் நஞ்சித்தின் றேயிறப்பார்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi