அகிலத்திரட்டு அம்மானை 7321 - 7350 of 16200 அடிகள்
என்வரிசை தானம் எல்லாமுனக் களித்துப்
பொன்னரசு தந்து புவியாள வைத்திடுவேன்
என்றுமா கிருஷ்ணர் இப்படியே சொல்லிடவே
அன்றந்தத் தேவன் அவரடியைத் தான்போற்றி
அய்யாவே பூமிதனில் அவதரிபோ என்றீரே
பொய்யா னகலியன் பூமிதனி லேபிறந்தால்
பிறந்த வழியும் பிதிருமந் தக்குலமும்
அறந்தழைக்கு மாலே அதுவுமென் னாற்கெதிதான்
பெற்றுக்கொள் ளும்படியாய்ப் புத்தி கொடுத்தருளிப்
பற்றுத லாகப் பலன்கொடுப்போ மென்றுசொல்லும்
அல்லாம லென்னைவந்து ஆட்கொள்ளும் நாளதுதான்
எல்லாம் விவரமதாய் இயம்பி யனுப்புமையா
அப்பொழு தந்த ஆதிநா ராயணரும்
செப்புகிறா ரந்தத் தேவன் தனக்குத்திடம்
தெச்சணா பூமிதனில் தேசபர சோதனைக்கு
நிச்சயமாய் நான்வருகும் நிசத்துக் கடையாளம்
பூமியி லோர்திக்குப் பொருந்தி மிகவாழும்
சாமிவே தமறந்து சுழல்வேத முண்டாகும்
சாதி வரம்பு தப்பி நிலைமாறும்
பாரிகட்கு மூப்புப் பார்மீதி லுண்டாகும்
நீசக் குலங்கள் நெளுநெளெனப் பூமிதனில்
தேசமிட்ட தெண்டந் தொடர்ந்து பிடிப்பார்கள்
வானத் திடிகள் வருடவரு டந்தோறும்
நீணிலத்தில் வீழும் நின்று மலைமுழங்கும்
பூமிமுழங்கும் பொழுதுமிகச் சாய்ந்துவரும்
சீமை தென்சோழன் சீர்பயிரு மேவிவரும்
இலைகள் கருகும் இருவேதம் பொய்யாகும்
தலைக்கண் படலம் தட்டழிய ஓடிநிற்கும்
நச்சேத் திரமுதிரும் நடக்கும் வழிகுறுகும்
பொய்ச்சேத் திரக்குருக்கள் பூமிதனில் மேவிவரும்
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 7321 - 7350 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi