அகிலத்திரட்டு அம்மானை 7291 - 7320 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 7291 - 7320 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஆத்தியே சூடும் வேதன் ஆகமே மகிழ்ச்சை கூர்ந்து
தீத்திய ஆய னோடு செய்தியே தெனவே கேட்க
நாற்றிசை புகழுந் தெய்வ நாரண ருரைக்கின் றாரே
தேவன் வணங்கித் திருப்பாதம் போற்றிடவே
ஆயனோ டந்த ஆதிசிவ மேதுரைக்கும்
அச்சுதரே தேவனுக்கு ஆன வளமையது
நிச்சயமாய்ச் சொல்லி நீரனுப்பு மென்றுரைத்தார்
அப்போது நாரா யணரு மகமகிழ்ந்து
செப்புகிறோ மென்று தேவனுக்கங் கேதுரைப்பார்
கேளாய்நீ தேவா கீழான மங்கையரைத்
தாழாத மேல்வகையில் சரியாக்க வேணுமென்று
நின்றாய் தவத்தில் நினைவொன்றைத் தானாட்டி
சண்டாளா நீநினைத்த நினைவுதவத் தொத்திடுமோ
சூழ வினையறுத்துச் சுருதிநே ருள்ளாக்கி
நீளநூ லிட்டு நீதவசு நிற்கையிலே
ஆசை நினைவாமோ அறிவுகெட்ட மாதேவா
பாச மறுத்தல்லவோ பரகெதியைக் காணுவது
ஏதுகா ணுன்றனக்கு இந்நினைவு வந்ததினால்
மாது பிறந்ததுபோல் வையகத்தில் நீபிறந்து
இந்த நினைவதற்கு இனிப்பிறந்து நீசிலநாள்
தொந்துயர மெல்லாம் தொல்புவியி லேதொலைத்துக்
கண்டந்த மங்கையரைக் கருவால் வசமாக்கிக்
கொண்டு திரிந்து கோதையரின் தன்னாலே
மிஞ்சிய தீனம் மேலுக்கு உண்டாகி
நஞ்சுதின் றானாலும் நாண்டுகொண் டானாலும்
உன்சீவன் மாய்க்க உனக்கு மனதாகிப்
இன்னுஞ்சில நாள்கழித்துப் பெண்ணோ டுறவாடித்
தன்னோவியம் போல் தானிருக்கும் நாளையிலே
உன்துயரந் தீர்த்து உன்னையெடுத் தென்மகவாய்
என்துயர மெல்லாம் யானேநீ மாற்றல்செய்து

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi